இன்று நான்கு சிறுவர்களின் மரணம்! அதிரை பெற்றோர்களுக்கு சொல்லும் செய்தி என்ன? (புகைப்படங்கள் இணைப்பு)போட்டிகள் நிறைந்த சூழல்களில் தன் மகன் நல்லமுறையில் படிக்க வேண்டும் என்ற எதார்த்த ஆசை பெருவாரியான பெற்றோர்களுக்கு இயல்பாக இருக்கும். அதனாலோ என்னமோ பெற்றோர்கள் தன் மகன் கேட்கும் பொருட்களை எந்தவிலை கொடுத்தாவது அதன் விபரீதங்களை உணராமல் வாங்கி கொடுத்துவிடுகின்றனர். பின் இளம் வயதிலேயே தன் அருமை மகனை இழக்க நேர்கிறது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும் தகவல் நம்மை பதற வைப்பதாக உள்ளன. நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களில் 80% பேர் இளம் வயதினர் என்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதனையும் அவரே விவரிக்கிறார். சாலையில் நம் பாதுபாப்பிற்காவே பல்வேறு அடையாள எச்சரிக்கை சின்னங்கள், கோடுகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை நாம் மதித்து நடந்தாலே பெருவாரியான சாலை விபத்துகளை தவிர்க முடிவும். ஆனால் சாலைகளில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் வாகனம் ஓட்டும் நிலையிலேயே நாம் உள்ளோம். முதலில் சாலை பாதுகாப்பு விதிகளை நாம் கற்க வேண்டும் அதன் பிறகே ஓட்டுநர் உரிமம் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இங்கோ அனைத்தையும் தலைகீழாகவே செய்கிறோம். 

ஏனெனில் சாலை கட்டமைப்பில் உள்ள அடிப்படை விசயங்களை கூட நாம் தெரிந்துவைத்திருக்க தயாரில்லை. அதிலும் பெற்றோர்கள் 18 வயது கூட பூர்த்தியாகாத சிறார்களுக்கு அவர்கள் மனம் கஸ்ட்டப்பட கூடாது என்பதற்காக அவர்கள் கேட்கும் இருசக்கர வாகனங்களை விபரீதங்கள் தெரிந்தும் கூட வாங்கிகொடுக்கின்றனர். பின் எப்படி விபத்துகளை தடுக்க முடிவும்?. இவரின் பேச்சில் உண்மை இருப்பதால் நம்மால் மறுக்கமுடியவில்லை.

இதற்கு மேலும் வலுசேர்கும் விதமாக இன்று ஏர்வாடி அருகே நடைபெற்றுள்ள சாலை விபத்து தக்க சான்றாகயுள்ளது. கீழக்கரையை சேர்ந்த இளம்வயதினர் செய்யது இப்ராகிம், அப்துல் ரஹ்மான், ஃபாஹீத் மற்றும் ராசீது ஆகிய நான்கு பேர் ஒரே பைக்கில் விளையாட்டாக சென்றுள்ளனர். அதுவே அவர்களுக்கு கடைசி பயணமாக அமைந்துவிட்டது. 

ஆம், சின்னக்கடைத்தெரு பகுதியை சேர்ந்த மூன்றுபேர் தெற்குதெருவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு பேர் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பஸ்சின் மீது நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில் இரண்டு பேரின் உடல் முழுவதும் அடையாளம் தெரியாதளவிற்கு சிதைந்து சின்னாபின்னாமாகியுள்ளது. மேலும் மீதமுள்ள இரண்டு பேரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்து விடுகின்றனர். இதில் இரண்டு பேர் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

அதிரையில் இன்றைய சூழலில் சிறார்களே அதிகளவில் பைக்குகளில் ஊர்வலம் வருகின்றனர். அத்தோடு அவர்கள் நின்றுவிடுகின்றார்களா? என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. பெற்றோர் வாங்கி கொடுத்துவிட்ட வாகனத்தை தன் எல்லைக்கு மீறிய வேகத்தில் இயக்குகின்றனர். அதன் விளைவாக கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் விபத்தில் சிக்கி இளம் இரத்தத்தை சாலைக்கு தானம் செய்துவிடுகிறது. இதற்கு மத்தியில் கடந்த சிலதினங்களுக்குமுன் அதிரை இளைஞர்கள் செய்த அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறை ஊருக்குள் புகுந்து அதிரடி வாகன சோதனைகளில் ஈடுபட்டது தங்களுக்கு நினைவிற்கலாம்.

கீழக்கரையில் நடந்த விபத்திற்கும் அதிரைக்கும் என்ன தொடர்பு என உங்கள் மனதில் எழும் கேள்விக்கு "விபத்துகள்' ஊர்களை பார்த்து வருவதில்லை என்பது மட்டுமே பதிலாக அமையும்.

தற்சமயம் கூட நம் குழந்தைகளுக்கு பைக் அத்தியாவசிய தேவையா? என்பதனை முடிவு செய்யும் அதிகாரம் நம் கையில் உள்ளன. என்ன முடிவு எடுக்க போகிறோம்!

Share:

3 comments:

 1. இந்த செய்தியை பார்த்தவுடன் ரொம்ப கஷ்டமாயிருந்தது. முடிந்தால் சமுக ஆர்வலர்கள் விபத்து அபாய எச்சரிக்கைப் பற்றிச் செய்தி வால் போஸ்டரின் மூலமாக அறிவிப்பு செய்யலாம் என்பது எனது கருத்தாகும்

  ReplyDelete
 2. இந்த செய்தியை பார்த்தவுடன் ரொம்ப கஷ்டமாயிருந்தது. முடிந்தால் சமுக ஆர்வலர்கள் விபத்து அபாய எச்சரிக்கைப் பற்றிச் செய்தி வால் போஸ்டரின் மூலமாக அறிவிப்பு செய்யலாம் என்பது எனது கருத்தாகும்

  ReplyDelete
 3. எல்லா மக்களையும் அல்லாஹ் காப்பாற்றனும்.
  விபத்து உள்ள புகைப்படத்தை நீக்கவும். ரொம்ப விகாரமான நிலையில் உள்ள புகைப்படங்களை இங்கே பிரசுரிக்காமல் இருப்பது நல்லது.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது