அதிரையில் பெரியளவிலான புதிய குப்பை தொட்டிகள் அமைப்பு!அதிரை அய்வா சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இரண்டு இடங்களில் குப்பை தொட்டிகள் இன்று மாலை வைக்கப்பட்டன.

அதிரை 13வது வார்டில் தக்வாப்பள்ளிவாசல் மற்றும் வாய்க்கால்தெரு அரசு பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை தொட்டியில்லாத காரணத்தினால் குப்பைகள் சாலைகளில் சிதறி கிடந்தன. இதனையடுத்து அய்வா சங்க இளைஞர்கள் சார்பில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு புதிய குப்பை தொட்டிகள் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று அதிரை நகர எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் பெரியளவிலான இரண்டு குப்பை தொட்டிகள் இன்று மாலை மக்களின் பயன்பாட்டிற்காக அற்பணிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது இலியாஸ், நகர தலைவர் அஜாருதீன், நூருல் அமீன், அன்வர் மற்றும் கோழிப்பட்டி அன்சாரி, அஹ்மது ஹாஜா உள்ளிட்ட அய்வா சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது