Saturday, June 4, 2016

கலைஞர் பிறந்தநாள் விழா - அதிரை சேர்மன் தலைமையில் உற்சாக கொண்டாட்டம் !

அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 93 வது பிறந்த நாள் விழா நேற்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை கலந்துகொண்டார். அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆதரவாளர்கள், திமுகவினர் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணி ஊர்வலம் புறப்பட்டனர். ஊர்வல முடிவில் அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினர்.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆதரவாளர்கள், திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

courtesy:adirainews

3 comments:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது