நெருங்கும் உள்ளாட்சி தேர்தல் -ஸ்டார் தொகுதியாக மாறி வரும் புதுமனை தெரு

தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று அதிமுக கட்சி அபார வெற்றி பெற்ற நிலையில் தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தல் அக்டோபர் மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்  தமிழக சட்ட சபை மூன்றாம் நாளான  இன்று மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார்.மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்யலாம் என்று திமுக ஆட்சி காலத்தில் இருந்த சட்டத்தை மக்கள்தான் தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் திருத்தினார் ஜெயலலிதா. மீண்டும் கவுன்சிலர்களே மேயர்களை தேர்வு செய்யலாம் என்று தற்போது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரை அரசியல் பிரமுகர்கள் பலரும் 19 வது வார்டு புதுமனை தெருவில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி,மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட பலரும் போட்டியிட ஆர்வம் கட்டி வருகின்றனர். 
Share:

3 comments:

 1. 6 நபர்கள் போட்டி

  ReplyDelete
 2. பல தடவை குறிப்பாக தெரு குப்பை, சாலை வசதி, கழிவுநீர், குடிநீர், மின்விளக்கு சரி செய்ய மற்றும் இன்ன பிற அடிப்படை வசதிகள் வேண்டி அப்பகுதி மக்களால் கோரிக்கைகள் வைத்தும் சரிவர அதை கவனிக்காத, அதில் அதிகம் ஆர்வம் காட்டாத, வருமானம் ஈட்டும் தன்னுடைய தொழிலில் மட்டுமே அதீத கவனம் செலுத்தும் வார்டு மெம்பர்கள் அது யாராக இருப்பினும் நமக்கு நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களாக இருப்பினும் சரி தயவு செய்து ஏதோ தனக்கு ஒரு அரசு சம்மந்தப்பட்ட பதவி வேண்டும் என்று வேண்டா வெறுப்பாயெல்லாம் வரும் உள்ளாட்சி தேர்தலில் தயவு செய்து நிற்க வேண்டாம். காரணம், ஆர்வமுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தன்னால் ஆன முயற்சிகள் செய்யும் விவேகமுள்ள யாரேனும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தாங்கள் தங்களது தொழிலில் அதிகம் கவனம் செலுத்திக்கொள்ள‌ வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


  சிம்பிளா சொல்றதா இருந்தா, மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை தொந்தரவாக கருதி தயவு செய்து கூலிக்கு மாரடிக்க வேண்டாம். இத்தேர்தலில் கட்சிகள் (அதிமுக, திமுக, காங்கிரஸ், ப்ளா, ப்ளா, ப்ளா....) முக்கியமல்ல. மக்களின் அடிப்படை வசதி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே முக்கியம். கவனத்தில் கொள்க.

  ReplyDelete
 3. கடந்த உள்ளாட்சித் தேர்தல் நமதூரில் வெறும் வெத்து வாக்குறுதிகளுக்கான தேர்தலே அன்றி பயனுள்ள தேர்தல் என்று அதிரையில் இருக்கும் எந்த நடுநிலையாலர்களாலும் கூற முடியாது.
  ஏனெனில் வாக்குறுதிகள் அனைத்தும் அள்ளி வீசப்பட்டன.. மாற்றம் வரும்.. சின்ன சிங்கப்பூர் ஆகும் என பல வாக்குறுதிகள்.. ஆனால் இன்று வரை சிங்கப்பூர் ஏன் பக்கத்த்தில் இருக்கும் பட்டுக்கோட்டையாக கூட இன்னும் மாற்றம் வரவில்லை...

  தேர்தலில் ஆரோக்கியமான போட்டி வேண்டும் ஆனால் வெற்றி பெற்ற பின் அவையெல்லாம் கானல் நீராக மாறிவிட கூடாது என்பதே எனது கருத்து.


  இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிரையர்கள் போலி வாக்குறுதிகளை நம்பாமல் சிந்தித்து வாக்களித்து ஊருக்கு நல்லதொரு இளம் தலைவரை உருவாக்கி சிரத்தையுடன் செயல் பட வழிவகுக்க வேண்டும்..


  இப்போட்டிக்கு இளைஞர்கள் அதிகமாக முன் வர வேண்டும்.. இளைய தலைமுறையால் மட்டுமே அதிரைக்கு மாற்றம் காணப்படுமே தவிர போலி வாக்குறுதிகளால் அல்ல.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது