கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி!


வெஸ்டன் யூனியன் மற்றும் பால் மெர்சண்ட்ஸ் இணைந்து மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தரசு அவர்கள் கலந்து கொண்டு முகஸின் முபாரக், ரகுபதி, சினேகா, சுமையா, பவித்திரன், திபிகா,காவியா, ஆர்த்தி உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில் இந்த மாணவ மாணவிகள் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக மண்டல மேலாளர் கோவிந்தராஜன் நன்றியுரை ஆற்றினார். 


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது