அதிரை வானத்தை வட்டமிட்ட மர்ம ஒளி! (வீடியோ)


அதிரையில் இன்று இரவு வானத்தில் மர்ம ஒளி தோன்றி வட்டமிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றிரவு நான்கு வெள்ளை நிற மர்ம ஒளிகள் சுமார் இரண்டு மணிநேரம் வானத்தில் வட்டமிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் என்ன ஒளி என தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து நேரில் பார்த்த முகம்மது பரீது அவர்கள் கூறுகையில் "இன்றிரவு நண்பர்களுடன் சாலையில் நின்றுகொண்டிருந்தேன் அப்பொழுது வானத்தில் திடீர் என நான்கு வெள்ளை நிற மர்ம ஒளிகள் தோன்றி வட்டமிட்டன."என்றார்.

Share:

2 comments:

 1. வேற்றுக்கிரகவாசிகளால் (Aliens) இயக்கப்படுவதாக உலகில் ஆங்காங்கே சொல்லப்படும்/நம்பப்படும் பறக்கும் தட்டாக (UFO - Unidentified Flying Object) இருக்குமோ? எல்லா ஜீவராசிகளையும், வஸ்த்துக்களையும் படைத்து அவைகளை முறையே பரிபாலிக்கும் வல்ல ரப்புல் ஆலமீனுக்கே எல்லாம் வெளிச்சம்.

  மேலே இணைக்கப்பட்டுள்ள காணொளியை இங்கு காண இயலவில்லை. மீண்டும் அவற்றை இங்கு எளிதில் எவரும் காணும் படி பதிவேற்றம் செய்ய வேண்டுமாய் அதிரை எக்ஸ்பிரஸை கேட்டுக்கொள்கிறேன்.

  நம் திருமறை குர்'ஆனில் வேற்றுக்கிரகம் பற்றியோ அதில் வசிப்பதாய் சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசி பற்றியோ ஏதேனும் சொல்லப்பட்டுள்ளனவா? விளக்கம் அறிந்தவர்கள் அது பற்றி ஒரு தனி பதிவாக இட்டால் அது பற்றி படித்து தெரிந்து கொள்ளலாமல்லவா?

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

   குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக கூறி இருக்கிறான் மனித வர்கத்தையும், ஜின் வர்கத்தையும் என்னை வணங்குவதற்க்காக படைத்திருக்கிறேன் என்று. இதிலே நமக்கு தெளிவு கிடைத்து விட்டது.

   யூதர்கள் (விஞ்ஞானி) அறிவு, கற்பனை, ஆராய்ச்சி என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதற்க்காக அவர்கள் செய்யும் சூழ்ச்சி அவ்வளவுதான் இது.

   Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது