Wednesday, June 8, 2016

அதிரை சாலிஹ் பற்றி அவதூறு பரப்பிய நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை!



அதிரை எக்ஸ்பிரஸ் மாத இதழின் துணையாசிரியராகிய முகம்மது சாலிஹ் பற்றி சிலதினங்களுக்கு முன் சமூக வலைதளமான முகநூலில் தவறான செய்தி ஒன்றை Adirai Beachnew என்னும் போலி ஐடியினை பயன்படுத்தி சிலர் பரப்பி வந்தனர். இதனால் முகம்மது சாலிஹ் அவர்களின் அறிமுக வட்டாரங்கள் பலர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு உண்மை நிலை குறித்து விசாரித்து தெளிவு பெற்றனர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். 

மேலும் தவறான தகவல் வெளியிட்ட நபர்கள் 24 மணிநேரத்திற்குள் மறுப்பு வெளியிட வேண்டுமெனவும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால் தவறான தகவல் வெளியிட்ட நபர்கள் மறுப்பு வெளியிட மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் முகம்மது சாலிஹ் அளித்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கையில் இறங்கிய முகம்மது சாலிஹ் தன்னை பற்றி தவறான தகவல்களை வெளியிட்ட Adirai Beachnew அட்மின்கள் மீது சைபர் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் தனிபிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முகம்மது சாலிஹ் கூறுகையில் "என்னை பற்றி தவறான தகவல் வெளியிட்ட Adirai Beachnew அட்மின்கள் மறுப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் அதனை இவர்கள் செய்யவில்லை. இவர்கள் தன்மனம்போன போக்கில் நான் செய்யாத தவறுக்கு என்னை தொடர்புபடுத்தி வெளியிட்ட தவறான தகவலினால் சமூகத்தின் மத்தியில் எனக்கு இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எனக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வரை சட்ட நடவடிக்கைகள் தொடரும்" என்றார்.

முகம்மது சாலிஹ் புதியதலைமுறை, கலைஞர் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பொதுநலன் சார்ந்த கருத்துக்களை பதிவு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது