அதிரை தக்வாபள்ளிவாசல் இஃப்தார் நிகழ்ச்சியில் சகஜமாக கலந்துகொண்ட மகேந்திரன்!


நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் வெற்றி வாய்ப்பினை இழந்தார். இந்நிலையில் அதிரைக்கு வருகை தந்த அவர் முன்அறிவிப்புகள்  ஏதுமின்றி தக்வா பள்ளிவாசலில் நடைபெற கூடிய இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவருடனும் இணக்கமாக பேசி மகிழ்ந்தார். இதனை சற்றும் எதிர்பாராத முஹல்லாவாசிகள் அவரை இன்முகத்துடன் வரவேற்று அன்றையதினம் நோன்பாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட நோன்பு கஞ்சி உள்ளிட்ட உணவு பொருட்களை  வழங்கினர்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது