எச்சரிக்கை! அதிரை பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் அபாயம்!இஸ்லாமியர்கள் ரமலான் என்னும் புனிதமிக்க மாதம் முழுவதும் நல்அமல்கள் செய்வது வாடிக்கை. ஆனால் இதில் சிலர் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத காரியங்களை பொதுமக்களுக்கு இடையூர் தரும் வகையில் செய்துவருகின்றனர். அதில் குறிப்பாக ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் கூட்டாக பத்திற்கும் மேற்பட்ட பைக்களில் இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு ரேஸ், ஜிக்ஜங், ஸ்டண்ட் போன்ற செயல்களில் ஈடுப்படுகின்றனர். இதனால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்புகள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் இதுபோல் இரவுநேர பைக் ரேஸில் ஈடுபட்ட சிலர் விபத்துகளில் சிக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

மேலும் இந்த செயல்களில் ஈடுபடும் பெருவாரியான நபர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறார்கள் ஆவர். தற்போதைய நடைமுறையில் சிறார்கள் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு அவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீதே அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. 

இந்நிலையில் அதிரையில் முறையான உரிமம் இல்லாமல் வாகனம் ஓடிவரும் சிறார்களை கண்டித்து வாகனங்களை பறிமுதல் செய்வார்களா? பெற்றோர்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது