உலக இரத்ததான தினம் நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு!


கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் மற்றும் மெரினாவின் தேவதைகள் இணைந்து ஜூன் 14 உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு *பிளீட் வாரீயர்ஸ்* எனும் நிகழ்ச்சியை நேற்று (14-06-2014) சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் மாலை 4.00 மணியளவில் நடத்தினர் . 

இந்நிகழ்ச்சிக்கு கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் நிர்வாகிகள் காயத்திரி , விக்னேஷ் மற்றும் மெரினாவின் தேவதைகள் நிர்வாகிகள் BLESSING மணிகண்டன் , BLESSING ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் . 
 
இந்நிகழ்ச்சியில் கடற்கரையை தூய்மை படுத்தல், இரத்ததான கொடையாளி விவரம் சேகரித்தல், இரத்ததானம் தொடர்பாக விழிப்புணர்வு  ஏற்படுத்தல், இரத்த துளி போன்ற மனித வடிவமைத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் சுமனா பிரேம்குமார் மற்றும் டாக்டர்.தீப்தி ஆகியோர் சிறப்பு உரை நிகழ்த்தினார்கள் .

இந்நிகழ்ச்சியில் ஏராளமான இரத்ததான கொடையாளர்கள் , சமூக ஆர்வலர்கள் , இளைஞர்கள் , கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர் .மேலும் இந்நிகழ்ச்சியில் CBD தஞ்சை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் அதிரை காலித் அஹ்மத் அவர்களும் கலந்து கொண்டார் .


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது