அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி! (புகைப்படங்கள் இணைப்பு)CRESCENT BLOOD DONORS தஞ்சாவூர்  மாவட்டம் சார்பாக "விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்" என்ற தலைப்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அளிக்க முடிவு செய்து உள்ளனர்.அந்த வகையில் இன்று (23-06-2016) இமாம் ஷாபி பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏன் அதிகமாக நடைபெறுகிறது,எப்படி நடைபெறுகிறது,இதை தடுப்பதுக்கு வழிகள் என்ன என்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு CBD மாவட்டத் தலைவர் பேரா.செய்யது அகமது கபீர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இமாம் ஷாபி பள்ளியின் மூத்த முதல்வர் ஜனாப். பரக்கத் சார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அபுதல்ஹா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கினார்கள் .மேலும் சமூக ஆர்வலர் ஸ்டாலின் அவர்களும்,  CBD மாவட்டத் தலைவர் பேரா.செய்யது அகமது கபீர் அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு வந்து இருந்த அனைவரையும் CBD பொறுப்பாளர் ஹஸன் அவர்கள் வரவேற்றார். CRESCENT BLOOD DONORS குறித்த அறிமுக உரையை CBD மாவட்ட செயலாளர் காலித் அஹ்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியினை அனைத்தையும் பள்ளி ஆசிரியர் பார்த்தசாரதி அவர்கள் அழகிய தமிழில்  தொகுத்து வழங்கினார்கள்.  இறுதியாக நன்றியுரை CBD பொறுப்பாளர் இப்ராஹிம் அலி அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் CBD மாவட்ட துணை தலைவர் கலிஃபா, CBD நகர பொறுப்பாளர்கள் நூர், ராஜிக் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது