அதிரை பேரூராட்சி மெத்தனப்போக்காக செயல்படுகிறது என AIWA குற்றச்சாட்டு !

அதிரை பழைய போஸ்ட்டாபீஸ் சாலையில் கரைபுரண்டு ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு அதிரை இஸ்லாமிக் வெல்ஃபர் அசோசியேசன் சார்பில் கடந்த 26.ஆம் தேதி பேரூராட்சி மன்றம் எதிரே சாக்கடை ஊற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக அதன் நிர்வாகிகள் கூறினார்.

இதன் ஆயத்தப்பணிகளான போலிஸாரின் அனுமதி, உள்ளிட்டவற்றை அவ்வமைப்பினர்  முறையாக செய்திருந்த நிலையில், காவல்துறையின் அனுமதிக்காக காத்த்திருந்தனர். 

இந்நிலையில் இருதரப்பாருக்கும் அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சம்மன்கள் முறையே EO முனியசாமி ,சேர்மன் அஸ்லம் உள்ளிட்டவர்களுக்கு காவல்துறையின் சார்பில் அனுப்பப்பட்டு கடந்த 28ஆம் தேதி காவல்நிலையத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

இதனை தொடர்ந்து AIWA அமைப்பினர் காவல்நிலையத்தில் காத்திருந்த நிலையில் பேசசுக்கு பேரூர் மன்றம்  சார்பில் யாரும் முன்வரவில்லை. 

இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த AIWA அமைப்பினர் நாளைமறுநாள் இதே போராட்டம் வீரியமான முறையில் நடைபெறுவதாக அறிவித்தவுடன் காவல்துறை சுறுசுறுப்புடன் செயலாற்றி இதற்க்கு முற்று புள்ளி வைக்க பேரூர்மன்ற அதிகாரிகளிடம்  கோரியது. 

இதன் அடிப்படையில் EO முனியசாமி, அய்வா அமைப்பினரை தொடர்புகொண்டு வரும் திங்கள் அன்று கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது என்றும், AS அதாவது இதற்கான அனுமதி கடிதம் AD அலுவகத்தில் பெற உள்ளதாகவும் தெரிவித்த அவர், கொஞ்சம் பொறுமையுடன் இருக்க AIWA அமைப்பினர்களிடம்  கேட்டுக்கொண்டார். 

இதனடிப்படையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வரும் திங்கள் வரை காத்துள்ளோம் என  AIWA அமைப்பினர் கூறினர் .இதனையும் கடந்து   இவ்விவகாரத்தில் மெத்தன போக்காக பேரூர் நிர்வாகம் செயல்பட்டால் வியாபாரிகளுடன் சேர்ந்து மிகப்பெரிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் என்கிறார் அவ்வமைப்பின் செயலாளர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது