பத்திரிக்கையில் எழுதி அனுப்ப வேண்டுமா..?


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதாவதொரு திறமை தொற்றிக்கொண்டிருக்கும்.

அந்த வரிசையில் ஒரு சிலருக்கு எழுதும் திறமை உண்டு. 
ஒரு சிலருக்கு தினந்தோறும் படிக்கும் வழக்கம் உண்டு. 
அதிவேகமாக வாசிக்கும் திறமை இதில் ஒரு சிலருக்கு உண்டு.

இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றி வாழக்கூடிய மனிதர்களுக்கு பல்வேறு அறிவாற்றல்கள் கிடைக்குமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சிறு சிறு கதைகள், கட்டுரைகள், கவிதை போன்ற எழுத்துப்பழக்கங்கள் மனிதனுக்குள் பல்வேறு உணர்வுகளை பறைசாற்றுகின்றன. 
இதில் நாம் உற்று நோக்கவேண்டிய விஷயம் இவ்வாறான எழுத்துப்பழக்கம் இருக்கக்கூடிய நபர்களில் ஒருசிலர் அறிவுசார்ந்த விஷயங்களை ரசனையோடு எழுதக்கூடிய திறமை உடையவர்களாகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம் அதிகமதிகமாய் கதை, கட்டுரைகள் எழுதக்கூடிய வழக்கமுடையவர்களாக இருப்பதால் தான். 
இவ்வாறான விஷயங்களை  ஒவ்வொரு எழுதும் ஆர்வமுடைய  தனிமனிதனும் தன்னுடைய வாழ்க்கையில்     நடைமுறைப்படுத்தினாலே வாழ்க்கையில்  வெற்றிக்கான ஏணிப்படிகளை கடந்து செல்லலாம் என்பது இதற்கு முன்பு  சாதித்தவர்களின் கூற்று.

அதற்கு சிறந்த உதாரணமாக திகழும் தமிழ்நாட்டின் முதல் பெண்  ஐ.பி.எஸ்.  திலகவதி. தனது  வாழ்க்கையில் பல்வேறு சாதனை சரித்திரத்திற்கு சான்றான இவரது  திருமணத்திற்கு பின்பு தான் தனது சாதனைகளுக்கு முகவரி எழுதியிருக்கிறார்.

ஆம்! அப்பெண்மணிக்கு குழந்தைகள் பிறந்த பின்பு தான் அவர் ஐ.பி.எஸ். ஆனார்.
 அதுமட்டுமா? அவர் சிறந்த எழுத்தாளருமாயிருக்கிறார். 
அவர் சிறந்த எழுத்தாளர் ஆனதற்கு காரணம் என்வென்று சற்று வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அவருடைய ஆரம்பக்காலக்கட்டத்தில் அவருடைய எழுத்துப்பழக்கம் சிறுகுழந்தையின் மழலைப் பேச்சுக்கள்போல இருந்ததாம்.. பிறகு தனது வார்த்தை பிறயோகத்திற்கு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு அதிகமதிகமாய் புத்தகங்களை வாசிக்க துவங்கினார். 
தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க அவருக்குள் விசாலாமான எழுதும் திறன் வலுக்கிறது. 
 அதன் பின்பு உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளாராக மக்கள் மன்றத்தில் தன்னை அடையாளப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அந்த தருனத்தில் இருந்த  விஷயம் அதிகமான புத்தகங்களை வாசிக்க தொடங்கிய பின்பு தான் என்பதை இந்த தருனத்தில் நாம் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவு சார்ந்த விசயங்களை உள்வாங்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சாதனைகளுக்கும் தூண்டுகோலாய் அமையும் என்பதே எமது மேலான கூற்றாகும்.

#இலக்கு சாமானியனின் குரல்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது