சிதறிய வங்கதேசம்! ஆதாயம் தேடும் பாசிசம்! -வங்கதேச குண்டுவெடிப்பு ஓர் பார்வை!

இன்று ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சிகளிலும் தலைப்புச் செய்தியாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் விஷயம் வங்கதேசம் குண்டுவெடிப்பு!

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் "டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களுடைய பிரசங்கத்தை கேட்டு தான் குண்டு வைத்தோம்"என அவர்கள் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள்.

 இதனால் டாக்டர் ஜாகீர் நாயக், இஸ்லாம் குறித்து செய்யும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அவருடைய சேட்லைட் தொலைக்காட்சியான பீஸ் (PEACE TV) தொலைக்காட்சியை தடை செய் வேண்டும் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் சிவசேனா உள்ளிட்ட பாசிச அமைப்புகள் அறிக்கை விட்டுள்ளனர்.

இந்த தேசம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக அரங்கிலும் இஸ்லாமிய கோட்பாட்டை பிற மத வேதங்களோடு ஒப்பிட்டு தன்னுடைய தர்க்கத்தின் மூலமாக அழகிய முறையில் தெளிவான ஆதாரங்களோடு எடுத்துரைத்து வருகிறார்.

இதனை ஜீரனிக்க முடியாத இந்த தேசத்தில் ஜனநாயகத்திற்கு எதிராக மதவாதத்தை மட்டும் தங்களின் வாடிக்கையாக கொண்டு  தொடர்ந்து தங்களுடைய விஷம பேச்சுக்களாலும், செயல்களாலும் நிரூபித்துக்கொண்டிருக்கும் பாசிச பயங்கரவாதிகள் டாக்டர் ஜாகீர் நாயக் விஷயத்தில் கங்கனம் கட்டத் தொடங்கி உள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில்  அதிகமாக சந்தேகிக்க தூண்டும் விஷயமாக கருதப்படுவது, "ISIS அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பது எப்படி வெட்ட வெளிச்சமானதோ அதே போன்று தான் இந்த குண்டு வெடிப்பில் பாசிசவாதிகளுக்கு தொடர்பு இருப்பதும் வெளித்திற்கு வருகிறது.

இஸ்லாத்தை அழகிய முறையில் தர்க்க ரீதியாக உலக அரங்கில் எடுத்து கூறும் டாக்டர் ஜாகீர் நாயக்கின் பிரச்சாரத்தினை சகிக்க முடியாத
இந்த சங்க்பரிவார கும்பல் தான் இத்தகைய குண்டுவெடிப்பை அரங்கேற்றி அதன் பலிகெடாவாக டாக்டர் ஜாகீர் நாயக்கை தொடர்புபடுத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்த இவரது பிரச்சாரத்தை முடக்க வேண்டுமென்பதே இந்த குண்டுவெடிப்பின் மூலம் ஆதாயம் தேடும் பாசிசவாதிகளின் நோக்கம் என்பதை ஒவ்வொரு நடுநிலைவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

#இலக்கு_சாமானியனின்_குரல்
Share:

1 comment:

  1. May Almighty Allah (SWT)protect Indian Muslims from these savage fascist forces.....May Dr Zakir Naik be victorious from these temporary ordeals created by Hindu fanatics. ..

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது