அதிரையில் ஜாகீர் நாயக்கிற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!


கடந்த சிலநாட்களாக இந்திய ஊடங்களில் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஜாகீர் நாயக் அவர்கள் பற்றி அவதூறான செய்திகளை வேகமாக பரப்பி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று மாலை அதிரை பேருந்துநிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் Z.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் பேரூராட்சிமன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் முன்னிலையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக், கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு உறுப்பினர் Z.முகம்மது தம்பி ஆகியோர் மத்திய அரசின் மறைமுக அஜந்தாகளை பற்றி விளக்கி பேசினர். 

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது