மழையிலும் சலூன் கடைகளை நாடும் அதிரையர்கள்!

இன்று உலகில் பல்வேறு நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிறை தென்படவில்லை என கூறி பெரும்பாலானோர் நோன்பு பெருநாளை நாளை கடைபிடிக்க போவதாக அறிவித்தனர். இதனையடுத்து இன்று ரமலான் பிறை 30வது நோன்பு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை பெருநாள் கொண்டாட இருக்கும் அதிரையர்கள் தற்பொழுது சலூன்கடைகளை அதிகளவில் நாடிவருகின்றனர். இதனால் அனைத்து சலூன் கடைகளும் நிரம்பி காணப்படுகின்றன. இவைகளுக்கு மத்தியில் இன்று மாலை நேரம் முதல் அதிரையில் சாரல் மழை பொழிந்துவருகிறது.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது