அதிரையில் நடந்த நேர்முகத்தேர்வு சிறப்பு பயிற்சி முகாம்

இன்று  இரவு அதிரை நடுத்தெரு பைத்துல்மால் அருகில் படித்த பட்டதாரி இளைஞர்கள் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற நேர்முகத்தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் தமுமுக மாணவர் இந்தியா அமைப்பு அதிரை கிளை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் செயலாளர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி, நியாஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகம் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வரும் அப்துல் ஹாதி MBA, M.Com., (ACCA) அவர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பட்டதாரி இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து உரை நிகழ்த்தினார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பின் நேர்முகத்தேர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

முன்னதாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா வரவேற்றார். மாணவர் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் செயலாளர் நூர் முஹம்மது நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி வணிகவியல், வணிக ஆட்சியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள், இதர பிரிவு பட்டதாரி மாணவர்களும்  கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது