இனி இணையதளம் மூலமே ரேசன் கார்டு முகவரி மாற்றம் செய்யலாம்.!

தமிழகத்தில் இணையதளம் வழியாகவே ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் உரையாற்றும்போது, "  தமிழகத்தில் மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்பட்டது.

 நடப்பு ஆண்டில் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மேலும் மேம்படுத்தப்படும். தீயணைப்புத் துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இணையதளம் வழியாகவே ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது