அன்று பட்டுக்கோட்டை! இன்று அதிரை! என்று திருந்தபோகிறோம்?


எத்தனைமுறை சொன்னாலும் சிலருக்கு மட்டும் புரிந்து கொள்ளும் அந்த மன பக்குவம் வருவதில்லை. தலைப்பை பார்த்ததுமே நான் சொல்ல வரும் செய்தியை நீங்கள் அநேகமாக உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

சிலதினங்களுக்குமுன் பட்டுக்கோட்டையில் டீ குடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு சவால்விடும் விதமாக சில சச்சரவுகள் செய்ய கடுப்பான காவல்துறை அதிரடியாக அதிரை வீதிகளுக்குள் புகுந்து வாகனம் ஓட்டி சென்ற சில அப்பாவிகளை மறித்து சோதனை நடத்தினர். அதுதோடு மட்டுமல்லாமல் பட்டுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களும் அடிக்கடி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டைக்கு குட்பாய் சொல்லிவிட்டு தற்பொழுது அதிரை வீதிகளுக்குள் ஆபத்தான தங்களின் சாகசபயணத்தை மேற்கொள்ளுகின்றனர் இளைஞர்கள். நேற்றிரவு முத்துப்பேட்டையிலிருந்து அதிரைக்கு சுமார் 15திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தங்களின் வாகனத்தை வீதிகளுக்குள் பொதுமக்களுக்கு தொந்தரவு தரும்விதமாக ஓட்டி சென்றுள்ளனர். 

இதேநிலை தொடர்ந்தால் அன்றுபோல் இன்றும் காவல்துறை அமைதியாக இருக்கும் தெருக்களுக்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையில் பொதுமக்கள் உள்ளனர்.

இனி எத்தனைமுறை எடுத்து சொல்ல வேண்டுமென நினைக்கின்றனர் இவர்கள்?
Share:

5 comments:

 1. பள்ளி, கல்லூரிகளின் நீண்ட விடுமுறைகளில் ஊருக்கு வரும் காளையர்கள்தானே இத்தகைய தொல்லைகளைத் தருகின்றனர்? மற்ற நாட்களில் குறைவு! அப்படித்தானே?

  ReplyDelete
 2. ஊரில் இருக்க கூடிய சிறார்கள் மற்றும் இளைஞர்கள் சென்னையிலிருந்து வந்து இருக்கக்கூடிய சக இளைஞர்களுக்கு ஊரில் இருக்கக்கூடிய நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்காக ; அனைவரும் சேர்ந்து செய்யக்கூடிய சாகசம், சாவுவரை வந்துவிடுகிறது.அந்தோ!.பரிதாபம் அவர்களின் குடும்பம் துயரத்தில் வாடுகிறது.பெற்றோர் சொல்லை கேட்காத பல இளைஞர்கள் ரமளான் மாதத்தின் நன்மைகளை இழந்தே வளர்கிறார்கள்.

  ReplyDelete
 3. ஊரில் இருக்க கூடிய சிறார்கள் மற்றும் இளைஞர்கள் சென்னையிலிருந்து வந்து இருக்கக்கூடிய சக இளைஞர்களுக்கு ஊரில் இருக்கக்கூடிய நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்று காட்டுவதற்காக ; அனைவரும் சேர்ந்து செய்யக்கூடிய சாகசம், சாவுவரை வந்துவிடுகிறது.அந்தோ!.பரிதாபம் அவர்களின் குடும்பம் துயரத்தில் வாடுகிறது.பெற்றோர் சொல்லை கேட்காத பல இளைஞர்கள் ரமளான் மாதத்தின் நன்மைகளை இழந்தே வளர்கிறார்கள்.

  ReplyDelete
 4. கீழக்கரை சம்பவத்தைப் பார்த்தும் அறிவு வரவில்லை.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது