மூளையில் நீர்க்கசிவு! சிறுவனுக்கு உதவி செய்வீர்!


சிறுவனின் பெயர் அர்ஷத் தென்காசியை சேர்ந்த சிறுவன் இந்த சிறுவனுக்கு மூளையில் அதிகப்படியான நீர்க்கசிவு இருந்ததால் இவன் வாந்தி மயக்கம் மற்றும் கிட்டத்தட்ட கோமா நிலைக்கு தள்ளப்பட்டு 6 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டு மூளையிலிருந்து இரண்டு டியூப்கள் மூலமாக சிறுநீர்பையில் இணைத்து சிறுநீரின் மூலமாக அந்த நீர் வெளியேறுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது இந்த 6 ஆப்ரேஷனுக்காக இவனுடைய தந்தை 27 இலட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார் கையில் இருந்த சொத்துக்கள்,வாகனங்கள் அனைத்தையும் விற்று மேலும் ஒரு சிலரிடம் கடனும் பெற்று இந்த ஆப்ரேஷன்களை செய்து முடித்தார் சிறுவனும் சகஜ நிலைக்கு திரும்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் இந்நிலையில் கடந்த சில மாத்திற்கு முன் பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கம் பொழுது கீழே விழுந்ததில் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப்பில் அடிபட்டு அந்த டியூப்பில் அடைப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி பொருத்திய இடத்திலிருந்து இடம் மாறிவிட்டது.

இதனால் சிறுவன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டான் இதற்கு உடனடித் தீர்வாக மருத்துவர்கள் உடனே ஆப்ரேஷன் செய்து அந்த டியூப்பை எடுத்து விட்டு புதிதாக வேறு ஒரு டியூப் பொருத்த வேண்டும் என்றும் அதற்கு ஆப்ரேஷனுக்கு மட்டும் இரண்டு இலட்சமும் சிகிச்சைக்காக மூன்று முதல் நான்கு இலட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர் ஏற்கனவே எல்லாவற்றையும் விற்றது மட்டுமல்லாமல் கடனாளியாகவும் இருக்கும் சிறுவனுடைய தந்தையால் அவ்வளவு தொகை திரட்ட முடியாததால் நம்மை நாடி வந்துள்ளார்   சிறுவனுக்கு இப்பொழுது நீராகாரம் மட்டுமே உணவாக சென்று கொண்டிருக்கிறது.

26 கிலோ எடை இருந்த சிறுவன் ஒரு வாரத்தில் 7 கிலோ எடை குறைந்து 19 கிலோவாக ஆகிவிட்டான் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சிறுவனின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிழை இருக்கிறது எனவே நல்லுள்ளம் படைத்த அன்பர்கள் சிறுவனுக்காக தாராளமாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமில்லாமல் உங்களுடைய ஒவ்வொரு துஆவிலும் இந்த சிறுவன் பூரண குணமடைய ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாரு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் திருப்பூர் தொடர்புக்கு: சகோதரர் காஜா - 7845421628 தொடர்பு கொண்டு உங்களுடைய பொருளாதாரத்தை வழங்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்த விரும்புபவர்கள் கீழ்க்காணும் சிறுவனின் தந்தையின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செழுத்தலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் கிருபை செய்வானாக.

இந்த தகவல் அதிரை ரெட்கிராஸ் சேர்மன் மரைக்கா இதிரீஸ் அவர்களால் நேரில் சந்தித்து உறுதி செய்யப்பட்டதாகும்.

Share:

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது