திருடனை பிடித்துவிட்டேன்!தொடர் திருட்டு சம்பவங்களால் போலிஸ் தரப்பிற்கு மேல்மட்டத்திலிருந்து உடனே குற்றவாளிகளை பிடித்தாக வேண்டுமென அழுத்தம். என்ன செய்வதன யோசித்தது நரிமூளை. அரசியல் அழுத்தம் குறைய வேண்டுமென்றால் முதலில் குற்றவாளிகளை நெருங்கியது போன்ற மாயதோற்றத்தை நாமே உருவாக்க வேண்டும். 

அது எப்படி சாத்தியம்? விசாரணை என்ற பெயரில் பின்பலம் ஏதுமில்லாத அப்பாவிகளை பிடித்து அவர்களை அடித்து உதைத்து செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள செய்துவிட்டால்? அவர்களுக்கு பிரச்சனை முடிந்தது. (அநேகமாக உங்கள் கண்முன்னே விராசணை படம் வந்து செல்லலாம்.)

ஆம், தமிழகத்தில் எங்கு திருட்டு நடந்தாலும் முதலில் குறிவைக்கப்படுவது பிழைப்பு தேடி தின கூலிக்கு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களே. அவர்கள் தவறு செய்யவில்லை என நான் கூற வரவில்லை மாறாக தவறு செய்தவர்கள் எல்லாம் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறுவது முறையற்றவை. தவறு செய்தவன் மனிதன் அவனுக்கு என தனித்தனியாக பெயர் உள்ளது. தவறு செய்யக்கூடியவனை அவனின் பெயரை வைத்து அடையாளப்படுத்தினாலே போதும் மாறாக அவன் சார்ந்துள்ள முழு சமூகத்தின் மீதும் குற்ற பார்வைகொண்டு பார்ப்பது முட்டாள்தனம். 

திருடர்கள் என்னமோ வட மாநிலத்தில் சிறப்பு பயிற்சிகள் பெற்று தென் மாநிலத்தில் திருடுவதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டதை போன்றும் இதேபோல் வட மாநிலத்தில் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் பிம்பங்கள் சிலரால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைவரையும் நாம் சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழல். இது புரியாமல் நாமும் பிறர் சொல்கேட்டு தலையை அசைத்து கொண்டிருக்கிறோம்.

முதலில் உலகில் உள்ள அனைவரையும் நாம் மனிதற்களாக பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். இயல்பாகவே மனிதன் என்றால் தவறு செய்ய கூடியவனே. அவர்களை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கட்டாயம். அதையெல்லாம் விட்டுவிட்டு மொழி இன வெறியிலான அடையாளங்கள் கொண்டு விமர்சனம் செய்வது அறிவு சார்ந்தது அல்ல.

அப்படி வட மாநிலகாரனே திருடன் என கூறும் நபர்கள் தென் மாநிலகாரர்களை பற்றி யோசிக்க மறந்தது ஏன்?

விசாரணை... தொடரும்

-Z.முகம்மது சாலிஹ்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது