பெருநாள் தினங்களில் மின் வெட்டு தொடர்கதை ...! மின் வாரியம் நடவடிக்கை எடுக்குமா ???நமது அதிரை நகரில் பரம்பரை பரம்பரையாக கலையப்படாத கசப்பான அனுபவம் ...என்ன வென்றால் குறிப்பாக பெருநாள் முந்தைய இரவு மற்றும் பெருநாள் அன்று ஏற்படும் மின் வெட்டு ஆகும். இச்சம்பவம் இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கசப்பான வெறுக்கத்தக்க நிகழ்வு. இது தொடர்பாக மேலும் தெளிவு பெறுவதற்காக ஒரு சில முதியோர்களிடம் கேட்ட போது அவர்களின் பதில் என்ன தெரியுமா...நாங்கள் சிறுவயதிலிருந்தே இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன என்றும்..மின்வெட்டு குறிப்பாக இரு பெருநாட்களில் கண்டிப்பாக நடக்கும் என்பதை கவனித்து வந்ததாகவும் சுமார் 70 வயது நிரம்பிய முதியோர் சொல்கிறார் என்றால் நாம் எவ்வாறு வாழையடி வாழையாக பாதிக்கப்படுகின்றோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதன் தொடர்ச்சி தான் நேற்று இரவு (பெருநாள் இரவு) மற்றும் இன்று காலையில் ஏற்பட்ட மின் வெட்டாகும். என்ன ஒரு ஆறுதல் என்றால் நாள் பூராவும் மின் வெட்டு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மின் வெட்டு ஏற்பட்டது.

அகிம்சையால் நம் இந்திய நாட்டை வெள்ளைக்காரனிடம் இருந்து விடுதலை பெற்று தந்த மகாத்மா காந்தி பிறந்த மண்ணில், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய தேசிய கவி பாரதியார் வாழ்ந்த மண்ணில், யாதும் ஊரே யாவரும் கேளிர்; ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிய கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த இந்த மண்ணில், வேற்றுமையில் ஒற்றுமை என்று மொழியால் தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்திய நேரு போன்ற தலைவர்கள் வாழ்ந்து சென்ற பூமியில் அவர்களின் நெறிமுறைகளை மறந்து செயல்படுவது நம் தேசத்துக்கே செய்யும் துரோகமாகும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே ....என்னும் உன்னத லட்சியத்தில் பயணிப்போம் அதற்கான அரசு இயந்திரத்தை இயக்கி நாட்டின் முன்னேற்றம் காண்போம் என்று இந்த பெருநாள் தினத்தில் நினைவு கூர்வோம். 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது