அதிரையில் பெருநாள் கொ(தி)ண்டாட்டம் !!

கடந்த ஒருமாத  காலமாக ஒற்றுமையாக நோன்பிருந்து இறைக்கட்டளையை நிறைவேற்றினோம் .  ஈகை திருநாளை வரவேற்க இருந்த நாம் இன்று மஃரிப் தொழுகைக்கு பின் பிறைக்கீற்றை நமதூரில் உள்ள உலமாக்கள் மட்டுமின்றி அனைவரும் தேடினர். 

மேகக்கூட்டங்களால் பிறை தென்படவில்லை.  இந்நிலையில் நாகர்கோவிலில் பிறை தென்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தினர் உள்ளிட்ட பல அமைப்புகள் நாளை பெருநாள் கொண்டாப்படும் என அறிவித்துள்ளது. இருப்பினும் வழக்கம்போல் அதிரை  நகரில் அனைத்து பள்ளிவாசலிலும் இரவு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிறையில் பிரியும் சமூகமே !

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் :1975


Share:

1 comment:

 1. பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம். நாளை பெருநாள் ஆகும்

  கன்னியா குமரி மாவட்டம் தெங்கம் புதூரில் பிறை பார்த்த தகவல் மிகவும் உண்மையானதாகும்.

  பிறையை நேரடியாக புறக்கண்ணால் பார்த்த சகோதரர்கள்

  ஷாஜகான் 9527996743

  மைதீன் 9688896434

  சுலைமான் 7418834052

  ராபி 7601037687

  சகாப்தீன் 9943566776

  ஆஷிக் 7708569080

  தலைமை காஜி உட்பட சுன்னத் ஜமாஅத் சகோதரர்கள் பிறையை நேரில் பார்த்த மேற்கண்ட சகோதரர்களிடம் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

  நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை
  செய்யப்பட்டுள்ளது.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.
  அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
  நூல்: புகாரி 1197, 1864, 1996

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது