அதிரையில் முத்துசாமியின் உடலை இந்துமுறைபடி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!


மதுக்கூர் மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். சில தினங்களுக்கு முன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் தஞ்சை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் கைவிட்டதால் இன்று காலை அதிராம்பட்டினத்திற்கு தனது மகளுடன் திரும்பினார். இந்நிலையில் மதியம் உயிரிழந்தார்.

இதனையடுத்து இஸ்லாமிய இளைஞர்கள் அநாதையாக இறந்து கிடந்த முத்துசாமி குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சட்ட நடைமுறைகள் முடிந்தபின் இந்து முறைப்படி இஸ்லாமியர்களே தங்கள் சொந்த செலவில் முத்துசாமியின் உடலை பேரூராட்சிக்கு சொந்தமான இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மேலும் முத்துசாமியின் மகளுக்கு நிதியுதவி அளித்தனர்.

பெருநாள் தினத்தில் மனிதநேய பணியாற்றிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு பாராட்டுகள்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது