Wednesday, July 6, 2016

விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்!



CRESCENT BLOOD DONORS தஞ்சாவூர்  மாவட்டம் சார்பாக "விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்" என்ற தலைப்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அளிக்க முடிவு செய்து உள்ளனர்.அந்த வகையில் இன்று (05-06-2016) தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏன் அதிகமாக நடைபெறுகிறது,எப்படி நடைபெறுகிறது,இதை தடுப்பதுக்கு வழிகள் என்ன என்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு CBD மாவட்ட செயலாளர் காலித் அஹமத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளியின் முதல்வர் அறிவானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் CBD மாவட்ட செயலாளர் காலித் அஹமத் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் . மேலும் இந்நிகழ்ச்சியில் CBD குறித்த அறிமுக உரையை CBD பொறுப்பாளர் நூர் அவர்கள் வழங்கினார்கள். 

இறுதியாக நன்றியுரை CBD பொறுப்பாளர் இப்ராஹிம் அலி அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் CBD மாவட்ட துணை தலைவர் கலீபா உட்பட பலர் கலந்து கொண்டனர் .

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது