அதிரை மின் வாரியத்தின் ஒத்துழைப்புக்கு நன்றி...!நம்மூரில் கடந்த ஜூன் மாதம், ஏறத்தாழ முதல் இருவாரங்களில் மின் வெட்டு அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து ரமலான் (நோன்பு) மாதத்திலும்  குறைந்தது 10 நாட்கள் மின்தடை ஏற்பட்டு பெரும்பாலான அதிரை வாசிகள் அவதிக்குள்ளாயினர். இதற்கிடையே நமது "ஸீ.எம்.பி லைனை சேர்ந்த ஜனாப் . கொ.மு.அ. ஜமால் அவர்கள் நம்மூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ரமலானை முன்னிட்டு  மின் தடை இல்லாமல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததை அடுத்து மின்தடை இல்லாமல் கடைசி 15 - 20 நோன்பு நாட்களில் நிம்மதியாகவும், மக்களுக்கு பயனாகவும் அமைந்தது.
மின்வாரிய அதிகாரிகளின், ஊழியர்களின் சரியான நடவடிக்கையால்
ரமலான் மாதம் மின்வெட்டு இல்லாமல் சுமூகமாக அமைந்தது. இதற்காக அதிரைவாசிகளின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். தொடரட்டும் அதிரை மின்வாரியத்தின் மக்கள் நலப்பணி. வாழ்த்துவோம் மனதார. 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது