ஜாகீர் நாயகிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பஹ்ரைன்வாழ் இந்தியர்கள்!


பஹ்ரைனில் இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய இன துவேசத்திற்கெதிரான கருத்தரங்கம்அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் ஒன்றிணைத்து, பஹ்ரைன் வாழ் தமிழ் உள்ளங்களின் கண்டனத்தை பதிவு செய்யும் முகமாக, பஹ்ரைன் இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய இன துவேசத்திற்கெதிரான கருத்தரங்கம் நேற்று 15-07-16 வெள்ளிக்கிழமை மாலை சவுத்பார்க் ரெஸ்டாரன்ட் அரங்கில் வைத்து நடைபெற்றது.

இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் பிரிவு தலைவர் அப்துல் கரீம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காயல் அத்தாவுல்லாவின் வரவேற்புரையுடன் துவங்கிய இக்கருத்தரங்கில் O.I.C.C காங்கிரஸ் தமிழ் பிரிவின் தலைவர் ஷாலோ, கலைஞர் செம்மொழி பேரவை(திமுக) செயலாளர் நாஞ்சில் பஷீர், மதிமுக தலைவர் வல்லம் பஷீர், பஹ்ரைன் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் தமிழ் பிரிவின் தலைவர் ஹுசைன் ஆகியோர் சுவாதி கொலை, டாக்டர் ஜாகிர் நாயிக் மீதான அவதூறு மற்றும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சி ஆகியவை சிறுபான்மை சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதோடு தங்களது கண்டனத்தையும் தெரிவித்துக்கொண்டனர். இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு கட்சியின் தொண்டர்களும், இந்தியன் சோசியல் ஃபோரமின் இம்முயற்சியை பாராட்டி தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் பிரிவு செயலாளர் சிதம்பரம் நவாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

கருத்தரங்கத்தில் விவாதிக்கபட்டவைகள் பின்வருமாறு:
1. மென் பொறியாளர் மாணவி சுவாதியின் கவுரவக்கொலையை வருத்ததுடன் கண்டித்தனர். உண்மையை கண்டறியும் முன்பே சிறுபான்மை சமூகத்தின் மீது இட்டுக்கட்டும் சாதிவெறி ஒய்.ஜி க்களையும், மீடியாவையும் தோலுரித்துக்காட்டினர். 
2. மோடி அரசின் 45,000 கோடி ஊழலை மறைப்பதற்காக உலகப்புகழ் பெற்ற டாக்டர் ஜாகிர் நாயிக்கின் மீதான அவதூறை கண்டித்தனர். வங்காள தேசத்தின் ஊடகங்கள் மறுப்பு தெரிவித்த போதிலும் மத்திய மற்றும் மாநில அரசும், இந்திய ஊடகங்களும் கண்ணை மூடிக்கொண்டு பொய்யை மட்டுமே பரப்புரை செய்வதாகவும், மேலும் சிறுபான்மை சமூகத்தை தீவிரவாத சமூகமாக சித்தரிக்க முயற்சி செய்வதாகவும் கூறினர்.
3. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த இரண்டே ஆண்டுகளில் தேசம் முழுவதும் சிறுபான்மை சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள் அதிகரித்திருப்பதாகவும், இந்தியாவில் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் ஏராளமிருக்க பொதுசிவில் சட்டத்தை கையிலெடுத்திருப்பது2017 ல் நடக்கவிருக்கின்ற உத்திர பிரதேச மாநில தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே எனவும் இந்தியா வல்லரசு ஆவதிலிருந்து ஒற்றைப்படுத்தப்படும் என்பதையும் கருத்தரங்கில் விவாதித்துக் கொண்டனர்.
ஆரம்பம் முதலே பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் நாங்களும் எங்களது கட்சியும் ஒன்றிணைந்து ஆதரவு தருவதாகவும் கூறினர்.

கருத்தரங்கின் முடிவில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் பின்வரும் கண்டனங்களை பதிவுசெய்து கொண்டனர்.
> சுவாதி கொலையின் உண்மை குற்றவாளிகள் எந்த மதத்தவராயினும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்,
> சுவாதி கொலைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக செயல்படுவது போன்றே,பாதிப்பிற்குள்ளாகின்ற சிறுபான்மை சமூகத்தவரின் பாதிப்புகளையும் காவல்துறையும், தமிழக அரசும் கவனம் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
> பாஜகவின் தீவிரவாத பேச்சுக்களை பேசிவரும் பாசிஸவாதிகளை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு ஆளாக்கவேண்டும்.
> டாக்டர் ஜாகிர் நாயிக்கின் மீதான அவதூறுக்கு ஊடகங்களும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
> பொதுசிவில் சட்டம் நடைமுறையாகாமல் ஜனநாயக நாட்டில் அனைத்து குடிமக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
 போன்ற கண்டனங்களை பதிவுசெய்தனர்.
வரவேற்புரையுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்தியன் சோசியல் ஃபோரம் துணைத்தலைவர் சிதம்பரம் நவாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஒருங்கிணைவோம்!களம்காண்போம்!களையெடுப்போம்!


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது