அதிரையில் மணலை அகற்றிய இளைஞர்களுக்கு உதவிய பொதுமக்கள்! நெகிழவைத்த நிகழ்வு!இன்று அதிரை CBD நகர தலைவர் இப்ராகிம் அலி அவர்கள் தலைமையில் ECR சாலையில் விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் மணல்களை அகற்றும் பணியை சேர்மன் அஸ்லம் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் செய்யது அகமது கபீர் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கிய அதிரை சேர்மன் அஸ்லம், அதிரை லயன்ஸ் சங்கம், முகைதீன், வழக்கறிஞர் நிஜாம், பேராசிரியர் சாகுல் ஹமீது ஆகியோருக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது சாலிஹ் நன்றி தெரிவித்தார்.

சேவை பணிக்கு தேவையான ஏற்பாடுகளை நகர செயலாளர் ஹாஜா முகைதீன், பொருளாளர் ஹசன், துணை தலைவர் நூர் முகம்மது, துணை செயலாளர் ராஜிக் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிலையில் மணல் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்களை பார்த்த பொதுமக்கள் சிலர் தாமாக முன்வந்து மணல்களை அகற்றிகொண்டிருந்த இளைஞர்களுக்கு உதவி செய்த நிகழ்வு கூடியிருந்த அனைவரையும் நெகிழவைத்தது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது