வேண்டாம் காழ்புணர்ச்சி! நோன்பின் மூலம் படிப்பினை பெறுவோம்!

வேண்டாம் காழ்புணர்ச்சி!

மனிதன் பல்வேறு கோணத்தில் பல விதமான தவறுகளை செய்வது இயல்பான ஒன்று.
 ஆனால் அதே நேரத்தில் அதை சரிசெய்வதன் மூலம் மனிதனுடைய தனித்தன்மை புலப்படுகிறது.
 அநாகரீக பேச்சுக்கள், பிற சகோதரர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துதல், சிறு சிறு விஷயங்களுக்காக எல்லை கடந்து கொபமடைதல், தவறான பழக்கவழக்கங்கள் இவை அனைத்தும் பெரும்பாலான மனிதர்களுக்குள் உலா வரக்கூடிய ஓர் அங்கம்.
 இதில் பல பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான உரிய தீர்வினை கொடுக்கும்பொழுதிலும் ஒரு சில தன்மைகளை மாற்றிக்கொள்வது சற்று கடினமான விசயமாக உருவெடுக்கத் துவங்குகிறது.
அதில் குறிப்பான ஒன்று காழ்ப்புணர்ச்சி!
பிறர் மீது ஏற்படும் குரோதத்தையும், வெறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் ஓர் நிகழ்வையே காழ்ப்புணர்ச்சி என்கிறோம்.

இந்த செயல் தனிமனிதனுடைய தனித்துவத்தின் கண்ணியத்தை சற்றே குறைத்து விடுகிறது.மத ரீதியான காழ்ப்புணர்ச்சி, இயக்க ரீதியான காழ்ப்புணர்ச்சி,இன ரீதியான காழ்ப்புணர்ச்சி,
ஊர் ரீதியான காழ்ப்புணர்ச்சி, ஒரு குறிப்பிட்ட பகுதி(ஏரியா) ரீதியான காழ்ப்புணர்ச்சி, என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் இஸ்லாம் நமக்கு கற்றுத்தரக்கூடிய விசயம் நிறையவே இருக்கிறது.
அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பை செலுத்த சொல்கிறது.
அவர்களிடம் அன்யோன்யமாக பழகவேண்டும் என நபிகளாரின் வரலாற்றில் மூலம்  உணர்த்துகிறது.

அவ்வாறிருக்க நாம் சிறு சிறு விசயங்களுக்கு குரோத மனப்பான்மையோடு செயல்படுவது இஸ்லாமிய மார்க்கத்திற்கு நேர்மாறான விசயமாக தான் கருத முடிகிறது.

 எனவே இந்த நோன்பின் மூலம் நம்முடைய காழ்ப்புணர்ச்சி என்னும் நஞ்சை போக்கி சமூகத்தின் ஒற்றுமையை பரைசாற்றும் வகையில்  அனைவரும் சமூகம் போற்றும் மனிதர்களாக மாற வேண்டும் என இத்தருனத்தில் உங்களுக்கு அன்பு கட்டளையிடுகிறேன்..

#இலக்கு "சாமானியனின் குரல்"
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது