அதிரை பேரூராட்சி அலுவலகம் முன்பு சாக்கடை ஊற்றும் போராட்டம் !

அதிராம்பட்டினம் 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது பழைய போஸ்ட்டாபீஸ் சாலை . இந்த சாலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கூறி JCB இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை பேரூராட்ச்சி நிர்வாகம் அகற்றியது . 

இதில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சிலமாதங்களாக சாலைகளின் இரு புறத்திலும் கழிவு நீர்கள் கரைபுரண்டு ஓடிக்கொண்டுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் பேரூர் மன்ற மநிர்வாகத்தை அணுகினர். ஆனால் இதுவறை அந்தச்சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் நின்றபாடில்லை. இதனால் அல் அமீன் ஜாமிஆ பள்ளிக்கு தொழுகைக்கு வரும் நபர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாவதோடு அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடும்பத்தினர் நோயின் பிடியில் சிக்கியுள்ளனர். 

இதனை கருத்தில்கொண்டு வருகின்ற 26.07.2016 அன்று காலை 11 மணிக்கு அதிரை இஸ்லாமிக் வெல்ஃபர் அசோசியேசன் சார்பில் பேரூராட்சி மன்றம் எதிரே சாக்கடை ஊற்றும் போராட்டம் நடைபெற உள்ளது. 

இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் AIWA அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   
Share:

3 comments:

  1. ஆஹா... போடு..சரியான முடிவு! செயலற்று கிடக்கும் அதிரை பேரூராட்சிக்கு தக்க பாடம் புகட்ட இதுவே சரியான நேரம் என கருதுகிறேன். நல்லா கிண்டி சாக்கடையை ஊத்துங்க அப்போ தான் நல்லா நாற்றம் வீசும்.. பிறகு தெரியுமல்லவா மக்களும் இப்படி தான் இதில் தான் வாழ்கின்றனர் என்று..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது