பற்கள் நமது உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி....!!!


மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன.

அதற்கடுத்த இரண்டு பற்களும் பெருங்குடல் மற்றும் நுரையீரலைப் பிரதிபலிக்கின்றன. கடைவாய்ப் பற்களுக்கு முந்தைய இரண்டு பற்களால் முறையே வயிறு, மண்ணீரல் ஆகியவற்றின் சக்தியும், கடைவாய்ப் பற்களால் இதயம், சிறுகுடலின் சக்தியும் எதிரொலிக்கப்படுகிறது.

மேற்சொன்ன உள்ளுறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது சம்பந்தமான பற்கள் தாமும் பாதிக்கப்பட்டு அபாய சங்கு ஊதும். எனவே பல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது.

பற்கள் தொடர்பான அக்கு பிரஷர் சிகிச்சை, குழந்தைகளுக்கும் செய்யக்கூடிய அளவில் எளிமையானது. சில குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து மறுபடி முளைக்க தாமதமாகலாம். அந்தக் குழந்தைகளின் குதிகால்களில் உள்ள கிட்னி சக்தி புள்ளிகளை தினசரி மூன்று வேளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால் போதும், பலமானப் பற்கள் முளைக்கத் துவங்கும்.

எல்லோரும் பரவலாகச் சந்திக்கும் பல் சம்பந்தப்பட்ட அடுத்த பிரச்சினை, தீராத பல்வலி. இதைக் குணப்படுத்த விரல்நுனி அழுத்தம் கைகொடுக்கிறது. முன் நான்கு பற்களுக்கு கட்டை விரலின் நுனியை தொடர்ச்சியாக இரு நிமிடங்கள் அழுத்தி விடவும்.

அடுத்த நான்கு பற்கள் வலித்தால், ஆட்காட்டி விரலையும், அடுத்த நான்கு பற்களுக்கு முறையே நடு, மோதிர விரலையும், கடைவாய்ப் பற்களுக்கு சுண்டுவிரலையும் தொடர்ந்து அழுத்தி வந்தால் பல்வலியைக் குணப்படுத்தலாம்.

பொதுவான ஒரு முறையும் உண்டு. அதாவது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய ஐஸ்கட்டியை வைத்துத் தொடர்ந்து இரு நிமிடம் அழுத்தினால், பல்வலி பறந்துபோகும்.

அடுத்ததாக பற்குழி. பல் மருத்துவரிடம் சென்று பற்குழிகளை சுத்தம் செய்து அடைத்துக் கொள்வதுதான் இதற்குச் சிறந்த வழி. ஆனால், எதைக்கொண்டு அடைக்கிறோம் என்பது முக்கியம். தற்போது இதற்கு ‘அமால்கம்’ முறையில் வெள்ளி பாதரசக் கலவை (30:70) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைக்கு உலகின் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. காரணம், இம்முறையால் ‘பாதரச ஆக்சைடு’ என்கிற விஷம் நம் உடலுக்குள் செல்கிறது.

சாப்பிடும்போது உணவோடு உணவாகக் கரைந்தும், சூடான பானங்களை அருந்தும்போது ஆவியாக மாறியும் உடலுக்குள் இது சென்றுவிடுகிறது. இதனால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. பாதரசம் இல்லாமல், ‘செராமிக்’ முறையில் அடைத்துக் கொள்வது நல்லது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது