அதிரையில் வழக்கத்திற்கு மாறாக நடைபெறும் திருமணங்கள்!


முந்தைய காலங்களில் பெரும்பாலும் அதிரையில் ஷவ்வால் மாதத்தில் திருமணங்கள் நடைபெறுவது என்பது அரிதான ஒன்றாக கருதப்பட்டுவந்தது. ஏனெனில் ரமலான் மாதம் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் அதிகமானோர் 6 நாட்கள் நோன்பு கடைபிடிப்பர். இதனால் முன்னோர்கள் ஷவ்வால் மாதத்தில் மகரிப் தொழுகைக்கு முன்னதாக திருமணங்கள் நடத்துவதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வருடம் அதிரையில் பெருவாரியான திருமணங்கள் ஷவ்வால் மாதத்தில் மகரிப் நேரத்திற்கு முன்னதாக நடைபெறுவது பெரியோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று முகைதீன் ஜும்மா பள்ளி உரையில் அறிவிப்பு ஒன்றும் செய்யப்பட்டது. அதில் பெரும்பாலும் ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் இனிவரக்கூடிய காலங்களில் மகரிப் தொழுகைக்கு முன்னதாக திருமணங்கள் நடத்தப்படுவதை தவிர்த்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.
Share:

4 comments:

 1. காலையில் நடத்தி மதியம் விருந்து வைக்கவேண்டாம் என்று சொன்னானார்கள் என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete
 2. சுன்னத்தான நோன்பு அதாவது 6 நோன்புடைய பலாபலன்களின் மீது தீராத காதல் கொண்ட நல்லடியார்கள் ஷவ்வால் மாதத்தில் பகல் விருந்து கொடுக்கமாட்டார்கள்.

  ReplyDelete
 3. சுன்னத்தான நோன்பு அதாவது 6 நோன்புடைய பலாபலன்களின் மீது தீராத காதல் கொண்ட நல்லடியார்கள் ஷவ்வால் மாதத்தில் பகல் விருந்து கொடுக்கமாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சுன்னத்தான நோன்பிற்காக, மற்றுமொரு சுன்னத்தான வலிமாவை தவிர்க்கச் சொல்வது சரியாகப் படவில்லை.

   இவ்வாறு சுன்னத்தான நோன்புகளுக்காக நீங்கள் விருந்துகளை தவிர்க்கச் சொன்னால் ஒவ்வொருமாதமும் பிறை 13,14 & 15; ஒவ்வொரு வாரமும் திங்கள் & வியாழன் மற்றும் ஷஃபான் மாதத்தின் பெரும்பான்மை பகுதி என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

   உணவருந்த விருந்திற்காக அழைக்கப்பட்ட ஒருவர் ’நான் நோன்பு’ என்று சொன்னபோது, ”உங்கள் சகோதரர் உங்களை விருந்திற்கு அழைத்திருக்கிறார் மேலும் உங்களுக்காக சிரமப்பட்டு உணவு சமைத்திருக்கிறார். நோன்பை முறித்துவிட்டு மற்றுமொரு நாள் விரும்பினால் நோற்றுக்கொள்ளுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய செய்தி பைஹகியில் ஹசன் தரத்தில் செய்யப்பட்டுள்ளதை நினைவில் கொள்வோம்.

   வெறுமனே இபாதத்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சரியான மார்க்க கல்வியை பயில்பவர்களில் உள்ளவராக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

   Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது