அதிரையில் சாக்கடை ஊற்றும் போராட்டம் மூன்று நாட்கள் தள்ளிவைப்பு !

அதிரை AIWA அமைப்பின் சார்பில் இன்று காலை நடைபெற இருந்த சாக்கடை ஊற்றும் போராட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அவ்வமைப்பின் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவ்வமைப்பினருடன் காவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .

அதில் அதிராம்பட்டினம் செயல் அலுவலர் முனியசாமி தற்பொழுது ஊரில் இல்லாததாலும். கூடிய விரைவில் வடிகால் அமைக்க காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம் கொடுத்துள்ளதின் பேரில் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிரை இஸ்லாமிக் வெல்பேர் அசோசியேசன் அமைப்பினர் முன்வந்துள்ளனர்.

எனவே இன்றுகாலை நடைபெறுவதாக இருந்த இப்போராட்டம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என  AIWA அமைப்பின் செயலாளர்.தெரிவித்துள்ளார்.
Share:

1 comment:

  1. 'இஸ்லாமிக் வெல்பேர் அசோசியேஷன்' என்ற பெயரில் இயங்குவதாகக் கூறப்படும் இந்த அமைப்பு, இஸ்லாம் முன்மாதிரியாகக் காட்டித் தராத போராட்டத்தில் ஈடுபட இருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது! இதைச் செய்வதற்கு முன், அவர்கள் என்னவெல்லாம் முயற்சிகள் செய்துள்ளார்கள் என்பதைப் பட்டியல் போடட்டும்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது