அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 36 வது மாதாந்திர கூட்டம் கடந்த 15/07/2016 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராத்                     : சகோ. M. அன்வர்தீன் ( உறுப்பினர் )
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை          : சகோ. M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் ) 

சிறப்புரை              : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. A.M.அகமது ஜலீல் ( துணை செயலாளர் )

நன்றியுரை           : சகோ. M.அப்துல் மாலிக்  ( இணை செயலாளர் )தீர்மானங்கள்:

1) அல்ஹம்துலில்லாஹ் இந்த வருடம் நோன்பின் கடந்த வருடத்தை காட்டிலும் இருமடங்கு நிதி உதவி செய்த நல்ல உள்ளம் படைத்த ரியாத் அதிரை வாசிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டு துஆ செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

2) மாதாந்திர சந்தா விஷயமாக பலகாரணங்களினால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத பொறுப்புதாரிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து சந்தா தொகையை அந்தந்த ஏரியா பொறுப்பு தாரிகளிடமோ அல்லது நண்பர்களிடமோ கொடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
  
3) வரும் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி திட்டம் ( தனிப்பட்ட முறையில் ஆடு / மாடு / கூட்டு குர்பானி ) விஷயமாக ஆலோசனை செய்து அதற்கான தொகை விஷயத்தை அடுத்த மாதம் அறிவிப்பதோடு வரும் கூட்டத்தில் பெயரை முன்பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

4) அதிரையிலுள்ள ஏழை எளிய மக்களின் நலம் கருதி இஹ்லாஸான முறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் (ABM) தலைமையகத்துக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து மேலும் சிறந்த முறையில் நடைபெற துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் AUGUST 12-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


                … ஸாகல்லாஹ் ஹைர்...
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது