அதிரை அருகே ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் நால்வர் படுகாயம் !

அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்தவர் சேக்தாவூது வேன் ஓட்னரான இவர் கடந்த ரம்ஜான் பெருநாள் அன்று குடும்பத்துடன் அரசர்குலத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார் . 

பெருநாள் முடிந்த நிலையின் இன்று மாலை தனது வாகனத்தில் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு ராஜாமடம் வழியாக அதிராம்பட்டினம் திரும்பினார் வாகனம் ரயில்வேகேட் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே  வாகனம் வந்து கொண்டிருந்தது அவ்வழியாக வந்துகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியது இதில்  வேனுக்குள் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 5பேர் பலத்த காயம் அடைந்தனர் . 

இதனை அடுத்து காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் தனியார் வாகனங்கள் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பபோழுது பணியில் இருந்த மருத்துவர் கார்த்திகேயன் காயமடைந்தவர்களை பரிசோதனை செய்த்ததில் மூவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மூவரையும் தஞ்சைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்வர்களில்  ஒருவர் கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து அதிரை காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து  விசாரணை செய்து வருகின்றனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது