செந்தலைபட்டினத்தில் சிறப்பாக நடைபெற்ற இஃப்தார்! அதிரையர்கள் பங்கேற்பு!


இன்று மாலை செந்தலைபட்டினம் பொதுநல சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிரை ரெட்கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இதில் பேராவூரணி துணை ஆய்வாளர் சுந்தர், கிராம நிர்வாக அலுவலர், அதிரை சார்பில் ஹாஃபில் முகம்மது, சமியுல்லாஹ், நூர் முகம்மது, நெய்னா மலை, பிஸ்மில்லாஹ் கான் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் 100கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கடந்த ஓராண்டாக செந்தலைபட்டினம் பொதுநல சங்கம் சார்பில் ஊரின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமிபத்தில் சங்கத்தின் சார்பில் புதிய அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது