அதிரை அருகே உள்ள மந்திரிப்பட்டினம் என்னும் ஊரில் சங்கக்காலத்தில் கடல் வணிகத்தளமாக இருந்தது! -ஆராய்ச்சி முடிவில் தகவல்!

பண்டைத் தமிழகம் என்பது சேர, சோழ, பாண்டிய நாடு என வழங்கப்பட்டு முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததை சங்க இலக்கியங்களும் தொல்லியல் சான்றுகளும் தெரிவிக்கின்றன. நிலையான அரசாட்சி மட்டுமின்றி பொருளாதாரத்தை வளப்படுத்தக்கூடிய அயல்நாட்டு வணிகத்திற்கும் மூவேந்தர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். மேற்குக் கடற்கரையிலும் கிழக்குக் கடற்கரையிலும்பல துறைமுகங்கள் இருந்துள்ளமைக்கு சங்க இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி தொல்லியல் சான்றுகளும் கட்டியம் கூறுகின்றன.

வரலாற்றுத் தொடக்க காலத்தில் பிளைனி, தாலமி, பெரிப்ளூஸ் என்ற நூலின் ஆசிரியர் ஆகிய மேலை நாட்டினர் தமிழகத்தைக் குறித்து பல செய்திகளைத் தந்துள்ளனர். தமிழகத்தில் இருந்த புகழ்பெற்ற பல துறைமுக நகரங்களையும் வெளிநாட்டு வணிகத்தைக் குறித்தும் இவர்களது குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தமிழக வணிகர்களும் இத்துறைமுகங்களின் வழியாக கடல்கடந்து ரோமானிய நகரங்களுடனும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் வணிகம் மேற்கொண்டனர்.

தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் செங்கடல் பகுதியில் உள்ள பெரினிகே, குஸீர் அல் குதாம், கோர்ரோரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பொது ஆண்டு முதலாம் நூற்றாண்டில் முசிறி வணிக ஒப்பந்தம் குறித்த பேப்ரஸ் காகித கிரேக்க மொழி ஆவணம் ஒன்று வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ளது. எனவே தமிழகம் மிகச்சிறந்த வணிகத் தலமாக அக்காலத்தில் இருந்தது என்பதை அறிய முடிகிறது.

கீழைக் கடற்கரைத் துறைமுகங்களாக காவிரிம்பூம்பட்டினம், நாகப்பட்டினம், கொற்கை ஆகிய புகழ்பெற்ற துறைமுக நகரங்கள் மட்டுமின்றி பல சிறிய துறைமுகங்களும் அக்காலத்தில் இருந்துள்ளன. அத்தகைய துறைமுகங்களிலிருந்தும் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கிழக்குக் கடற்கரையில் பந்தர் என்ற துறைமுக நகரத்தை சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து குறிப்பிடுகின்றது. 

இந்நகரம் அணிமணிகளுக்குப் புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது. பந்தர் என்னும் பெயரில் சோழநாட்டில் மணல்மேல்குடிக்கு அருகில் உள்ள ஊர் பந்தர் பட்டினம். பந்தர் என்னும் அராபியச் சொல்லுக்கு பண்டகசாலை உள்ள ஊர் என்பது பொருள். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கடல் வழியாக வந்த கலன்களில் (கப்பல்கள்) இறக்கப்படும் ஏற்றப்படும் பொருட்கள் வைக்கப்படும் பண்ட சாலைகள் உள்ள நாட்டிற்குத் தலைவன் எனக் குறிக்கப்படுகின்றான்.

பந்தர்பட்டினம் என்னும் பெயரில் தற்பொழுது தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம் பட்டினம் அருகில் மீன்பிடிக்கும் சிறிய கடற்கரை ஊராக விளங்குகிறது. இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் திருவத்தேவன் ஊராட்சிக்குட்பட்ட மீனவர் பட்டினமாக தற்பொழுது விளங்கி வருகின்றது. 

இவ்வூர் தற்பொழுது மந்திரிப்பட்டினம் என்றும் பெயரில் வழங்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கில் உள்ள செந்தலைப்பட்டினம் அருகிலும் தெற்கிலுள்ள சுப்பம்மாள் சத்திரப் பகுதியிலும் ஊரின் மையப்பகுதியிலும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் 2015 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். 

மொத்தம் 8 குழிகள் இடப்பட்டதில் மந்திரிப்பட்டினம் வரலாற்றுத் தொடக்க காலம் முதல் 14ஆம் நூற்றாண்டுவரை ஒரு துறைமுக வணிக ஊராக இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

இவ் அகழாய்வில் சேரர்கள் சங்க காலத்தில் வெளியிட்ட வில் பொறித்த சதுரக் காசும் இடைக்காலச் சோழர்கள் வெளியிட்ட செப்புக்காசுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சங்க கால சேரரின் வில் பொறித்த சதுரக்காசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அதேபோன்று இடைக்காலச் சோழர்களின் செப்புக் காசுகளும் விஜய நகர கால வெள்ளிக்காசு ஒன்றும் கிடைத்துள்ளன. இவ் அகழாய்வில் மிகுந்த அளவில் காசுகள் கிடைத்திருப்பதால் இவ்வூர் இடைக்காலச் சோழர்களின் காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

மேற்குறித்த நாணயங்களைத் தவிர இவ் அகழாய்வில் அதிக அளவில் பல வண்ணங்களால் ஆன அருமணிகள் கிடைத்துள்ளன. எனவே இப்பகுதியிலிருந்து மணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது. 

அகழாய்வில் குடிநீரை வடிகட்டும் சுடுமண்ணால் ஆன குழாய்கள் 6 அடி நீளத்தில் இரண்டு குழிகளில் கிடைத்துள்ளன. ஒரு குழியில் தண்ணீர் சேமிக்கும் பானை ஒன்றும் கிடைத்துள்ளது. இப்பகுதியில் குடிநீருக்கான ஏரிகள் மிகுந்து இருப்பதால் இவ்வேரிகளிலிருந்து நெடுந்தொலைவிலிருந்து வரும் கப்பல்களுக்கும் மரக்கலங்களுக்கும் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களும் இத்துறைமுகத்தின் வழியாக ஏற்றப்பட்டிருத்தல் வேண்டும்.

இவ் அகழாய்வில் தூய தங்கத்தின் துண்டு ஒன்றும் சிறிய அளவில் பொன் துகள்களும் கிடைத்துள்ளன. சுடுமண்ணாலான எருதின் தலை ஒன்றும் செம்பாலான நீண்ட ஊசி, சுடுமண் மணிகள், காதணிகள், பெண்கள் விளையாடும் பானை வட்டில் மற்றும் மிகுந்த அளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டு இப்பகுதியில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். 

இவ் அகழாய்வுகளின் மூலம் மந்திரிப்பட்டினத்தின் தொன்மையை அறிய இயலும்.

மந்திரிப்பட்டினம் அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தில் கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை மீண்டும் அகண்ட அளவில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை மாணவர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவர்கள் கபிலன், சக்திவேல் மற்றும் பூண்டி அ.வி.வி. புட்பம் கல்லூரி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, முசிறி அறிஞர் அண்ணா கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்களும் பங்கேற்றனர்.
Share:

அதிரையில் எந்நேரமும் பணம் செலுத்தலாம்!அதிரையில் உள்ள வங்கியிலேயே மிகவும் மோசமான சேவை வழங்கும் வங்கியாக இந்தியன் வங்கி கிளை கருதப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறப்பான சேவை வழங்கும் வகையில் இந்தியன் வங்கி சார்பில் அதிரையில் 24 மணிநேரமும் பணம் செலுத்தும் CDM இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாக இனி இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் எந்நேரமும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
Share:

அதிரை பேரூர் மன்ற தலைவர் உட்பட 16 திமுக வினர் கைது


காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


காவிரியில் உடனடியாக தண்ணீரைப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இதற்காக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை முதல் அமைச்சர் சந்திக்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார். 

இந்த போராட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் முன்னிலையில் ஒன்றிய பிரதிநிதி மருதையன், நிஜாமுதீன், இஷாக், மல்ஹர்தீன், அன்வர்தீன், ஜாகிர் உசேன், ஜஹபர் அலி, பகுருதீன், சைஃபுதீன், கனி, காதர், ஹனீப், அஸ்லம், ராஜதுரை உள்ளிட்ட 16 பேர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


 
 
 
  
  
 
Share:

புற்றுநோய் வராமல் தடுக்கும்!!!

புற்றுநோய்
ஆய்வு ஒன்றில் அத்திப்பழத்தில் உள்ள
உட்பொருட்கள், உடலில் உள்ள டாக்ஸின்களை
வெளியேற்றி, புற்றுநோய் செல்களின்
வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல்
தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
இரத்த சோகை
அத்திப்பழம் இரும்புச்சத்தை உடலுக்கு வழங்கி,
ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, இரத்த
சோகை வரும் அபாயத்தைத் தடுக்கும்.
எடை குறைவு
உடல் எடையைக் குறைக்க நினைப்போர்
ஸ்நாக்ஸாக அத்திப்பழத்தை உட்கொண்டு
வந்தால், அது வயிற்றை நிரப்பி நீண்ட நேரம்
பசி எடுக்காமல் தடுத்து, வேகமாக உடல் எடை
குறைய உதவும்.
இதயம்
அத்திப்பழம் இதயத்திற்கு நல்லது. அதில் உள்ள
பெக்டின் உடலில் இருந்து டாக்ஸின்களை
வெளியேற்றும் மற்றும் உடலில் உள்ள
கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான அளவில்
பராமரிக்கும்.
பா
இப்பழத்தை உட்கொள்வதால் எலும்புகள்
வலிமை அடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட
பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

Share:

அதிரை பேரூராட்சியின் புதிய தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள்

அதிரை பேரூராட்சியின் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அஸ்லம்.இந்நிலையில் பல வருடங்களாக அதிரையில் உள்ள குளங்கள் வற்றி வறண்ட  நிலத்தடி நீர் மட்டம் குறைந்த நிலையில் இருந்த போது ஊருக்கு ஆற்று நீர் கொண்டு வரும் முயற்சியில் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து கட்சி ஆதரவு இன்றி பல இடையூர்க்ளுக்கு  மத்தியில் இரவு பகல் பாராமல் குளத்திற்கு ஆற்று நீர் கொண்டு வந்து வெற்றியும் கண்டார். மேலும் குடிநீர் பிரச்சனை,தேங்கும் குப்பைகளை இரண்டு வேலையாக பிரித்து காலை இரவு நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இருப்பினும் அவர் மீது சில நேரங்களில் சர்ச்சைகள் வெடித்தாலும் அஸ்லம் அவர்கள்  ஊர் நலன் விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டார் என்பது நிதர்சன உண்மை. 

மேலும் வரும்  அதிரை புதிய ஆட்சியாளருக்கு தண்ணீர்  விஷ்யம் கடும் சவாலாக இருக்கும் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது. 
Share:

அதிரை வார்டு கவுன்சிலர்கள் விற்பனைக்கு!


தமிழக அரசு நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையில் மீண்டும் மாற்றம் செய்யும் வகையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. இதன்படி கடந்த 2011 தேர்தலில் பின்பற்றப்பட்ட நேரடி தேர்வுமுறை இனி பின்பற்றப்படாது மாறாக வர கூடிய உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மன்ற உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள். 

இதன்மூலம் அதிக உறுப்பினர்களின் ஆதரவு பெறும் நபரே தலைவராக வர இயலும். இதனால் அடுத்த ஆண்டுகளில் வார்டு கவுன்சிலர்களின் காட்டில் முன்பு போல மீண்டும் நல்ல பண மழை பெய்யக்கூடும் என அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்காரணமாக வாக்காளர் பெருமக்கள் தேர்தலின் பொழுது நல்ல சேவை செய்ய கூடிய நபர்களை தேர்வு செய்ய வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளனர். இல்லையெனில் அடுத்த ஐந்தாண்டு அவர்களின் சுயலாபத்திற்காக நம்மை அடங்கு வைத்துவிடுவார்கள்.

அதிரை மக்களே விழித்துகொள்ளுங்கள்!
Share:

அதிரை பேரூராட்சி தலைவரை இனி வார்டு கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள்!


நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பதற்கான சட்டமுன்வடிவு அறிமுகத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். இதன்காரணமாக இனி வர கூடிய உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சி தலைவரை வார்டு கவுன்சிலர்களே தேர்வு செய்வர்.

மேலும் நகராட்சி, மாநகராட்சி தெரு விளக்குகள் LED பல்புகளாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Share:

இறந்த மனைவி உடலை சுமந்து சென்ற கணவர்.. ஷாக் ஆன பிரதமர்

ஒடிஷாவில் மருத்துவமனையில் உயிரிழந்த தன் மனைவியின் உடலை 10 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஏழை மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார். ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மாஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23ம் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மாஜ்கி தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியை கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மனம் வருந்தி உள்ளார். பின் தானா மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. 

அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தானா மாஜ்கியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்.

Share:

அதிரையில் மழை!அதிரையில் சில தினங்களாக வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்ந்துவருகிறது. அதேபோல் இன்றிரவும் நல்ல மழை பெய்ந்துகொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share:

அதிரையர்கள் அதிகளவில் கலந்துகொண்ட உவைசி பொதுக்கூட்டம் !

மஜ்லிஷே இத்திஹாதுல் முஸ்லீமீன் அமைப்பின் இந்திய தலைவரும் தெலுங்கானா நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுத்தீன் உவைசி இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், காஷ்மீரில் நடக்கும் பிரச்சனையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றும் இதனால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிரபிக்கபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றார் .

இப்பிரச்சனைக்கு மத்திய அரசும் மாநில அரசும் தனி தனியாக செய்பட்டு வருகிறதுதான் காரணம் என குற்றம் சாட்டிய அவர் . காஷ்மீர் விவகாரத்தை சுமூகமாக தீர்த்துக்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்டவேண்டும் என்றும் அதற்க்கு மஜ்லிஷே இத்திஹாதுல் முஸ்லீமீன் கட்சி தயாராக உள்ளது என்றார் மேலும் வரக்கூடிய தேர்தல்களில் டிவி, மிக்ஷி,குக்கர்,பங்கா(காத்தாடி) போன்ற இலவசங்களை கண்டு இஸ்லாமியர்கள் ஏமாற கூடாது என்றும் நம்மை மடையர்களாக்கும் கூட்டம் ஓன்று மத்தியில் அமர்ந்துக்கொண்டு உள்ளது என எச்சரித்தார்.

இந்த நிகழ்ச்சியில்   இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் SM பாக்கர் உள்ளிட்ட ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Share:

விளையாட்டு போட்டியில் சாதனை புரிந்த அதிரை மாணவர்கள்!

59 வது குடியரசு தின விழா  பட்டுக்கோட்டை வட்ட தடகள போட்டிகள் 26/08/2016. 27/08/2016ஆகிய இரண்டு நாட்கள்  மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில்காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிராம்பட்டினம் மாணவர்கள் 90 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்தம் சாம்பியன் பட்டம் வென்றனர்.  மேலும் சீனியர் பிரிவு மாணவன்               பி. முத்துராசு தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராளுமன்ற  மேலவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம் MPஅவர்கள்,  மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் MP அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் C.V சேகர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  முன்னிலையில் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Share:

அதிரையில் பலமுனை போட்டிக்கு தயாராகும் உள்ளாட்சி தேர்தல் !


சட்டமன்ற தேர்தல் படபடப்பு இன்னும் அடங்காத நிலையில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளன .இந்நிலையில் அதிரை நகரில் தலைவர் பதவிக்கு பலமுனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அதிமுகவில் இரு அணிகளாகவும் திமுகவில் இரு அணிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர் என்றும் இது திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்ட பெரும் இழுக்கு எனகூறினார் .  இது எதிரணியாக இருக்கும் வாய்ப்பாக அமைந்துவிட கூடும் என தெரிகிறது. 

கடந்த முறை வெற்றிபெற்று பொறுப்பில் இருக்கும்திமுகவை சேர்ந்த சகோதரர் அஸ்லம் அவர்கள் மாநில அரசிடம் இருந்து நிதியை முறையாக பெற்று எந்தவித கட்டமைப்பையும் செய்து தரவில்லை. இதுகுறித்த அவர் பலமுறை அதிகாரிகளை அணுகுவதற்கு மன்ற உறுப்பினர்கள் யாரும் ஓத்துழைப்பு நல்குவதில்லை என கூறுகிறார். 

இதுகுறித்து மன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வினவியபோது. அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும். உறுப்பினர்களுக்கு உண்டான மரியாதையை வழங்கிடவில்லை என கூறுகின்றனர். எது எப்படியோ வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகாவது  ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக,அதிமுக ஊரில் செல்வாக்கு மிக்க எல்லோருடனும் நல்லமுறையில் அனுகுகூடிய மனோபான்மை கொண்டவர்களை வார்டு மற்றும் தலைவர் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.
Share:

மாற்றம் காணும் பிலால் நகர்! அதிரை இளைஞர்களின் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!


ஏரிப்புறகரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். இவர்கள் பெரும்பாலும் தின கூலி வேலையினை நம்பியே வாழ்க்கையினை நகர்த்திவருகின்றனர். இது ஒருபுறமிருக்க இந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் பெரும்பான்மை வீடுகளில் கழிவறை வசதியில்லை. இதனால் பெண்கள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர். 

இந்நிலையில் அரசின் மானியத்தில் வீடுகள் தோறும் கழிவறை கட்டிகொடுக்கும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் அதிரை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து 128 வீடுகளுக்கு கழிவறை கட்டிகொடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களுக்குமுன் இறங்கினர்.

இதில் முதல் கட்டமாக சமூக ஆர்வலர்கள் சிலரிடம் வசூல் செய்த பணத்தை கொண்டு தலா 18,000 ரூபாய் மதிப்பில் தரம்வாய்ந்த 6 கழிவறைகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிலால்நகர் டெவலப்மெண்ட் புரோகிராமின் ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் முகம்மது தம்பி அவர்கள் கூறுகையில் "முழுமையாக கழிவறை கட்டிய பின்னரே அரசின் மானியம் ரூ. 12000 பயனர்களுக்கு கிடைக்கும் நிலையுள்ளது. ஏற்கனவே வறுமையில் உள்ள மக்கள் தங்கள் கை பணத்தை போட்டு கழிவறை கட்டுவது என்பது சாத்தியப்படுவதாக தெரியவில்லை. அதனால் இளைஞர்கள் நாங்கள் ஒன்றினைந்து வறுமையிலிருக்கும் மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் சிலரிடம் நிதி வசூல் செய்து முதல் கட்டமாக 6 கழிவறைகளை தரமுடன் கட்டி கொடுத்துள்ளோம். மேலும் மீதமுள்ளவர்களுக்கு கழிவறை கட்டி கொடுக்க எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது." என்றார்.

பிலால்நகர் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடும் இவர்களை போன்ற இளைஞர்களின் முயற்சிக்கு நம்மால் இயன்ற பங்கினை செய்வோம் சமூகத்தை முன்னெடுப்போம்.

மேலும் விபரங்களுக்கு முகம்மது தம்பி அவர்களை 9677741737 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொள்ளவும்.
Share:

அதிரையில் கட்டுரை போட்டிக்கு தேதி நீட்டிப்பு!


அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பில் மாநிலம் தழுவிய கட்டுரை போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் முன்கூட்டியே அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்டுரையினை சமர்பிக்கும் தேதியினை 4 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதன்காரணமாக வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் தங்கள் கட்டுரைகளை பள்ளி கல்லூரி மாணவர்கள் சமர்பிக்கலாம்.
Share:

அதிரையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!


                      
அதிரையில் நேற்று (26/08/2016) மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதிரை முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் நடந்த இந்த முகாமில் பலர் தங்களுடைய பெயர், தொலைபேசி எண்  முகவரி ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினராக இணைத்துகொண்டனர்.

இந்த முகாமை இத்ரிஸ் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
Share:

மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம் நடுத்தெருவைதெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி
 நூர்லாட்ஜ் நூர் முஹம்மது அவர்களின் மகனும் மர்ஹூம்
மஹ்மூது அவர்களின் மருமகனும் சாகுல் ஹமீது அன்சாரி
செய்யது முஹம்மது ஆகியோரின் சகோதரரும மீரா சாஹிப்
என்கிற பைசல் அஹமது ஹாஜா ஷெரீப் ஆகியோரின்
தகப்பனாருமாகிய முஹம்மது இக்பால் அவர்கள் இன்று
இரவு ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி
விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர்
அறிவிக்கப்படும்.

Share:

முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பிய அதிரை பைசல்!!!


                                

அதிரையை சேர்ந்த          பைசல்  முதலமைச்சரின்  தனிப்பிரிவிற்கு மனு அனுப்பிவுள்ளார். 15வது வார்டு புதுநெய்யகாரத் தெருவில் சாலை மற்றும் வடிக்கால் இன்று வரை அமைக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிநிற்கும் அவலமும்  ஏற்ப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்ட  தெருவைச்சேர்ந்த பைசல்  அவருடைய தனிப்பட்ட முயற்சியால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பிவுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து விரைவில் பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சாலை மற்றும் வடிக்கால் அமைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

அதிரையில் ஹிந்துவின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!அதிரை ரயில்வே ஸ்டேசனில் ஆதரவுயற்ற முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த இஸ்லாமியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் அதிரை பைதுல்மால் ஆம்புலன்ஸ் மூலம் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறை அதிகாரி உடலை பார்வையிட்டார்.

இறந்து நீண்ட நேரமாகிவிட்டதினால் உடல் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. உடனே இஸ்லாமியர்கள் உடலை குளிப்பாட்டி தங்களின் செலவில் ஹிந்து முறைப்படி பேரூராட்சிக்கு சொந்தமான இடுக்காட்டில் அடக்கம் செய்தனர். இதனை பார்த்துகொண்டிருந்த சில ஹிந்து நண்பர்கள் தங்கள் பங்கிற்கு சிறு தொகையினை அளித்தனர். மேலும் ஹிந்து முறைப்படி அடக்கம் செய்யவும் உதவினர்.


Share:

அதிரையில் இரத்த தானம் செய்ய முன்வந்த கொடையாளர்கள்!


இன்று (26/08/2016) அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில்  CRESCENT BLOOD DONARS உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 200க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும்  கலந்துகொண்டு தங்களுடைய பெயர்,  தொலைபேசி எண், முகவரி மற்றும் தங்களுடைய இரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்தனர். 

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை CBDயின் மாவட்ட செயளாலர் காலித் அஹமத் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அதேபோல் CBDயின் மாவட்ட துணை தலைவர் கலிஃபா அவர்கள் இந்த முகாமை ஒருங்கினைந்து நடத்தினார். மேலும் CBDயின் நகர தலைவர் இப்புராஹிம், நகர துணைத் தலைவர் நூர் முகமது மற்றும் உறுப்பினர்கள் ஸாலிம், அபுபக்கர், அஃப்ரித் , அஸ்ரப், ஜுபைர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
Share:

அதிரை மக்கள் மகிழ்ச்சி!


அதிரை மக்களின் நிண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த அல் அமீன் பள்ளிவாசல் அருகே கழிவுநீர் வாய்கால்  அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த பணி விரைவில் முடிவுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் கழிவுநீர் வாய்கால் மேல் கான்கிரீட் மூடி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
Share:

திராணி இல்லையே!!

பிறந்தோம்!  வாழ்ந்தோம்!
 சந்தோஷமாக வாழ்ந்தோம்!

 பிறருடைய சந்தோஷத்தை நினைத்துப் பார்க்க நேரமில்லை...

தன் குடும்பத்தை மட்டும் நினைத்துப் பார்த்தோம்!
பிறருடைய கஷ்டங்களை நினைக்க மறுத்தோம்!

தன் குடும்பத்தின் தாகம் தணிந்தது என்று ஆனந்தம் கொண்டோம்!

பிறரின் தாகத்தை தணிக்க மறுத்தோம்!!

வறுமையின் குரல் வீதியின் நடுவே ஓங்கி ஒலிக்கிறது அந்நேரத்தில் மட்டும் செவிடர்களாய் ஆனோம்....

இரத்த வெள்ளம் ஓட  வெடிக்கிறது சாதி மதக் கலவரம்....

ஆனால் வீதியில் இறங்கி போராட திராணி இல்லையே  ஏன் இந்த அவலம்....?

சாதி கொலைகளும், பெண் வன்கொடுமைகளும் நீள்கிறது நம் வசந்த பூமியிலே....

அதை கண்ட உன் மனம் சற்றும் கூட கலங்கவில்லையே!

போராடிப் பெற்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் உள்ளத்திலே....

வக்கிரம புழுதிக்காற்றை வீசுகின்ற அவலமே...!

ஒருமுறை தான் மனிதனுக்கு இவ்வுலகில் வாழ்க்கை....

அதில் தான் சுயநலத்திற்கும்,பொதுநலத்திற்குமிடையில் நடக்கிறது ஓர் யுத்தம்...

வெகுநாட்களாய் காத்திருந்த நீதிவான்களெல்லாம் மண்ணிற்குள் செல்கையிலே....
 
நீதியின் குரல் மட்டும் அழுகிறது மண்ணின் மேலே....

விதைத்தவர்களெல்லாம் ஆலமரமாய்  நிற்கின்றன விதைகளின் உள்ளத்திலே.....

அதனாலோ என்னவோ அழிக்க நினைக்கும் நஞ்சுக்களெல்லாம் அழிந்துவிடுகிறது சிறுமுளையிலே....

காதுகளின் ஓரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் நீதியின் குரலெல்லாம்...

நம் கண்களின் ஓரத்தில் வழியும் கண்ணீரை துடைக்கவிருக்கும் அமைதிக்காகவே....

மீண்டும் வேண்டும் சுதந்திரம் என்று உரக்கச் சொல்வதெல்லாம்

நாளை நம் சந்ததிகளின் உயிர் காக்க நின்று உதவும் என்பதற்காகவே....

இனியும் சுயநலம் தான் உன் வாழ்க்கை என்றால்

இன்றே எழுதிக்கொள் நாளைய  சந்ததியின் இறுதி நாளை....

-இலக்கு "சாமானியனின் குரல்"
Share:

ஹஜ் செய்யும் மக்களுக்கு தகவல்

ஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு
ஹஜ் யாத்ரீகர்கள் ஜமாரத் எனும் ஷைத்தானுக்கு கல்லெறியும் சமய சடங்கை பாதுகாப்புடன் நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதன்படி முறைப்படுத்தப்பட்ட நேரங்களில் ஹஜ் யாத்திரை குழுக்கள் கல்லெறிய அனுமதிக்கப்படுவர் என்றாலும் கீழ்க்காணும் தினங்களில் குறிப்பிட்ட நேரத்தில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஹஜ், உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

துல்ஹஜ் பிறை 10 ஆம் நாள்: காலை 6 மணி முதல் காலை 10.30 மணி வரை.

துல்ஹஜ் பிறை 11 ஆம் நாள்: பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை.

துல்ஹஜ் பிறை 12 ஆம் நாள்: காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை.

ஹஜ் யாத்ரீகர்கள் முறைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட தடத்தில் அனுமதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், புனித கஃபத்துல்லாஹ்வில் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஜமாஅத் தொழுகைக்கு முன்னும் பின்னும் ஒரு மணி நேரம் "தவாஃப் அல் குதூம்" செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஹஜ் யாத்ரீகர்கள் புனிதப் பள்ளிக்குள் நுழையும் போது இஹ்ராம் ஆடையுடனும், கை பட்டியுடனும், அடையாள அட்டைகளுடனும் இருக்க வேண்டும் எனவும் இவற்றை 90 முதவாக்கள் ( mutawwifs ) 3 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News

Share:

நீங்களும் பலகாரங்களை செய்யுங்கள்!

அனைவரும்
பல்வேறு பலகாரங்களை
வீட்டில் செய்து கொண்டிருப்பார்கள். நீங்களும்
அப்படி பலகாரங்களை செய்து வந்தால்,
சிம்பிளான செய்முறையைக் கொண்ட எள்
உருண்டையையும் செய்யுங்கள்.
இங்கு அந்த எள் உருண்டையின் எளிய
செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்
படித்து செய்து சுவைத்து,

தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - 1 கப்
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எள்ளைப் போட்டு சிறிது நேரம் வறுத்து
இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் எள்ளை சேர்த்து, அத்துடன்
வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, பின் சிறு
உருண்டைகளாக உருட்டினால், எள் உருண்டை
ரெடி!

Share:

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்பு CBD உறுப்பினர் சேர்க்கும் முகாம்!

காதிர் முகைதீன் கல்லூரி முன்பு CBD உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது .இதில் சுமார் 320 மாணவர்கள் தங்கள் பெயர், முகவரி தொலைபேசி எண் மற்றும  இரத்த வகையினை பதிவு செய்தனர். இந்த முகாமில் CBD   மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.  CBD மாவட்ட துணை தலைவர் கலிஃபா, நகர துணை தலைவர் நூர் முகமது மற்றும் உறுப்பினர்கள் அஸ்ரப் அப்ரித், அபுபக்கர்,சுஹைப், சாகுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share:

மாணவ-மாணவிகள் செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம்....!!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை தயார் செய்துள்ளது.இதன் உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சி மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்விளக்கம் வழங்கப்பட்டது.

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை மூலம் ‘TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும் நாங்கள் பதிவு செய்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம்.

மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டு தங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்த படம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.பின்பு அந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விளக்கங்களையும் அதில் பெற்று படித்து கொள்ளலாம். 

இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில் 57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.. 
Share:

ததஜ ஆர்ப்பாட்ட தேதி மாற்றம் !தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஒட்டக குர்பானிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி . நாளையதினம் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்ம் நடைபெறுவதாக அதன் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாஃபி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்தார். 

இந்நிலையில் முன்னதாகவே அவ்விடத்தில் மற்றொரு அரசு அமைப்பினர் போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெற்று விட்ட காரணத்தால் போலிஸ் தரப்பில் இருந்து வேறொரு இடத்தில் ததஜ போராட்டம் நடத்தி கொள்ள கோரியது. 

இதனை நிராகரித்த அவ்வமைப்பு  நாளைய தினம் நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நாளைய மறுநாள் அதாவது வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு  சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Share: