இனி இந்த தேசத்தில் யாரும் படிக்க முடியாது! மத்திய அரசின் அச்சுறுத்தும் செயல்பாடு! (பாகம்-01)


ஆண்டாண்டு காலமாக போராடிபெற்ற உரிமைகளில் உரசி பார்ப்பது மத்திய பாஜக அரசிற்கு ஒன்றும் புதிது அல்ல. ஆம், தற்போதய கல்வி முறையில் மாற்றம் செய்கிறோம் என்ற பெயரில் மக்களை மீண்டும் அரைநூற்றாண்டு பின்னோக்கி இழுத்து செல்லும் புதிய கல்வி கொள்கையை உருவாக்க துணிந்துவிட்டது மத்திய அரசு. இதனால் பாதிக்கப்பட போவது மாணவ சமூகம் மட்டுமல்ல மாறாக பொதுமக்கள் அனைவரும் தங்களது அறிவு திறனை இழந்து நிர்கதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த புதிய கொள்கைபடி கல்வி முறையில் ABC என்ற தரத்தில் மாணவர்களை பிரித்து அதில் A பிரிவில் இருக்கும் மாணவர்கள் மட்டுமே முன்னேறி செல்லும் தகுதி படைத்தவர்களாக கருதப்படுவர்.

இதனால் பிறர் கல்வியில் உயர்வு பெற முடியாத சூழல் ஏற்படும். மேலும் இதன்மூலம் குலத்தொழில் முறையினை மீண்டும் பின்பற்றவைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு.

தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டுமெனில் நாட்டில் உள்ள மக்களிடம் அவரவர் தாய் மொழிகளில் ஆலோசனை கேட்பது என்பது அவசியமான ஒன்று. ஆனால் இங்கோ ஆங்கிலத்தில் மட்டுமே மக்களின் கருத்துக்களை கேட்டுள்ளது, தேசத்தில் மக்கள் பயன்படுத்தும் எந்த மொழிகளிலும் இதுகுறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் மக்கள் தங்களின் கருத்துக்களை அரசிடம் தெரிவிப்பதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க இனி மாணவர்கள் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே தங்கள் விருப்ப மொழியில் படிக்க இயலும் 6ஆம் வகுப்பு முதல் அவர்கள் கட்டாயம் ஆங்கில வழி கல்வியை மட்டுமே கற்க வேண்டும். இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதோடு அவர்களின் கற்றல் உரிமையும் பறிக்கப்படுகிறது. மேலும் சமஸ்கிரதம் மற்றும் ஹிந்தி திணிப்பும் இதில் மறைமுக அஜண்டாவாக உள்ளன.

மேலும் தகவல்கள் அடுத்த பதிவில் தொடரும்...

-ஜெ.முகம்மது சாலிஹ்

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது