SDPI முப்பெரும் விழா நேரலை.

Tuesday, August 30, 2016

அதிரை பேரூர் மன்ற தலைவர் உட்பட 16 திமுக வினர் கைது


காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


காவிரியில் உடனடியாக தண்ணீரைப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இதற்காக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை முதல் அமைச்சர் சந்திக்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார். 

இந்த போராட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் முன்னிலையில் ஒன்றிய பிரதிநிதி மருதையன், நிஜாமுதீன், இஷாக், மல்ஹர்தீன், அன்வர்தீன், ஜாகிர் உசேன், ஜஹபர் அலி, பகுருதீன், சைஃபுதீன், கனி, காதர், ஹனீப், அஸ்லம், ராஜதுரை உள்ளிட்ட 16 பேர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


 
 
 
  
  
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது