2016 புனித ஹஜ் பயணத்திற்கான விமானங்களின் பட்டியல் வெளியீடு !

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சகணக்கான யாத்திரீகர்கள் விமானங்கள் மூலமாக சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு செல்வார்கள். 

இப்புனித யாத்த்ரீகர்களின் வசதிக்காக விமான நிலைய ஆணையரகம், மற்றும் இந்திய ஹஜ் கமிட்டியினர் சிறப்பு விமானங்களை இயக்குவர். 

அதன்படி 2016 ஆம் ஆண்டின் ஹஜ்ஜுக்கான சிறப்பு விமானங்களின் பட்டியலை தமிழக ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ளது.. 

அதில்  தமிழகத்தில் இருந்து வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் (AI 5301) சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு புறப்படுவதாக ஹஜ் கமிட்டியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது