அதிரை பேரூராட்சியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் !


இந்தியாவின் 70 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். விழாவில் பேரூராட்சி அலுவலர்கள் - பணியாளர்கள், ஜமாத் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.

courtesy;adirainews
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது