அதிரையில் பார்த்த வேலைக்கு சம்பளம் கொடுக்கவில்லை!

அதிராம்பட்டினம் பேரூராட்சி சுமார் 12.8 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பளவு கொண்ட தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இங்கு குப்பைகளை அகற்றும் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்தபடி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் மாதத்தில் ஆறு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்தே ஊதியம் வழங்குவதாக கூறி ஒப்பந்த ஊழியர்கள் இன்று காலை பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். 

இதேபோல் கடந்த மாதமும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் செய்தனர். அதன்பின்னர் அவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் ஊழியர்களின் சம்பள பணத்தை பிடித்தம் செய்துள்ளதால் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது