கிணற்றுக்குள் இறங்கி உயிரை காப்பாற்றிய அதிரை இளைஞர்கள்!ஆட்டுக்குட்டி ஒன்று தட்டாத்தெருவில் உள்ள சுமார் 30 அடி கிணற்றில் தவறி விழுந்துள்ளது. மூன்று நாட்கள் ஆகியும் இதனை மீட்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த அய்வா சங்க இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிகொண்டிருந்த ஆட்டுக்குட்டியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். 

நீண்டநாட்களாக கிணற்றில் சிக்கிதவித்த ஆட்டுக்குட்டி வெளியில் வந்ததும் அதற்கு உணவாக வழங்கிய இலையினை வேகமாக சாப்பிட்ட காட்சி அங்கு கூடியிருந்த அனைவரையும் மனம் கலங்க வைத்தது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது