அவனின் காம இச்சைக்கு நான் இரையானேன்!


"நான் செய்யக்கூடிய சிறுசிறு தவறுகளை கூட பெரியளவில் பில்டப்கள் செய்து முறையற்ற அறிவுரைகள் எனக்கு வழங்கினர். அதன் பிறகே என் உள்ளத்திற்குள் ஒருவித பயம் ஏற்பட துவங்கியது. இந்த சமூகத்தில் நான் ஏதும் சரிவர செய்ய தெரியாமல் இருப்பதாக எண்ணி அஞ்ச துவங்கினேன். அதற்கான வழிகளை தேடி அலைந்துகொண்டிருக்கும் பொழுது அவனது நட்பு எனக்கு கிடைத்தது. அவன் என்மீது காட்டும் அன்பு எனக்கு பிடித்திருந்தது. பார்ப்பதற்கும் அவன் அழகாக இருந்தான். நாங்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தோம். எனக்கென அவன் மட்டுமே நண்பனாக இருந்தான் அதனாலோ என்னமோ அவனை நான் முழுமையாக நம்பினேன். ஆனால்...! அவன் என்னை அவனின் காம இச்சைக்கு மட்டுமே பயன்டுத்துகிறான் என்பது பிறகே எனக்கு தெரிய வந்தது. ஒருநாள் எதார்த்தமாக அவனது செல்ஃபோனை எடுத்து ஃபோட்டோக்களை பார்த்துகொண்டிருக்கும் பொழுது அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை நான் உணர்ந்தேன். அதுகுறித்து அவனிடம் சண்டைபோட்டேன் ஆனால் அவன் என்னை ஏமாற்றிவிட்டான்."

இதுபோல் பல்வேறு கதைகளை நாம் அண்றாட செய்திதாள்களில் படிப்பதுண்டு. ஆனால் என்றாவது இதில் உள்ள கருத்து பற்றி சிந்தித்து பார்த்துள்ளோமா? குழந்தைகளை நாம் வளர்க்கும் பொழுது அவர்கள் செய்யும் சிறு தவறுகளை கூட பெரியளவில் கற்பனை செய்து ஆலோசனை வழங்குகிறோம் என்ற பெயரில் முறையற்ற வகையில் கூறும் கருத்துகள் அவர்கள் மனதில் தேவையற்ற பயத்தை ஏற்படுத்துகின்றது. குழந்தைகள் பிறக்கும்போதே அனைத்தும் அறிந்தவர்களாக பிறப்பதில்லை. அவர்களுக்கு நல்லது எது? கெட்டது எது?? என எடுத்து சொல்லும் பொறுப்பு அவர்களை பெற்ற பெற்றோர்களுக்கே உண்டு. அதனை எடுத்து சொல்லும் விதமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் குழந்தை தவறு செய்வதாக நீங்கள் உணர்ந்தால் குழந்தையிடம் அன்பாக பேசி சிலவற்றை கண்டிப்புடன் விளக்கி சொல்லுங்கள். மாறாக அவர்களை திட்டிவிட வேண்டாம். மேலும் அவர்களை தாழ்த்திவும் பேசிவிட வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் பேசினால் பிறரின் அரவனைப்பை தேடி சென்றுவிடுவர். இதனால் ஏற்படும் விபரீதம் நாம் எண்ணுவதைவிடவும் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகளிடம் எப்படி பேசுவது? அடுத்த பதிவில் பார்க்கலாம்...

-ஜெ.முகம்மது சாலிஹ்
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது