வாஞ்சிநாதனை வர்ணிக்கும் தமிழக முதல்வரின் பார்வைக்கு !

இன்று சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிக்கப்பட்டுள்ள வாஞ்சி நாதன் ஆதிக்க வர்க்கமான உயர் சாதியை சேர்ந்தவராவார் . அன்றைய ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் வாஞ்சிநாதனின் இருப்பிடத்தை தாழ்த்தப்பட்டவர்கள் கடந்து செல்லவேண்டுமானால் தோளில் உள்ள துணியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டும் காலணிகள் அணியாமலும் தான் கடந்து செல்ல வேண்டும். 

இதனை அறிந்த ஆஷ் துறை என்ற ஆங்கிலேயே கலெக்டர் இதனை கண்டித்ததோடு அல்லாமல் மனிதர்களில் தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என யாருமில்லை எல்லோரும் சமம் என கூறியுள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த வாஞ்சி ஆஷ் துறையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து போட்டு தள்ளியுள்ளார்.

இதுதான் வரலாறு ஆனால் இன்று இஸ்லாமியர்களின் உண்மையான தியாகங்களை எல்லாம் இரட்டடிப்பு  செய்வதுடன்  மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகளாகவும் , பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கபடுகிறார்கள்..
------------------------------------------------------

சுதந்திரப் போராட்ட தியாகியின் குடும்பம் பென்ஷன் கிடைக்காமல் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவரது தியாகியின் மனைவி சபுரா அம்மாள்குற்றம் சாட்டியுள்ளார் .  

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேட்டை சாலையில் வசித்து வந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது . இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படையில் தீவிரமாக பணியாற்றியவர். நேதாஜிக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார்.

இந்நிலையில் தமிழக அரசின் தியாகிகள் பென்ஷன் வாங்கி வந்த முகமது தாவுது கடந்த 2015ம் ஆண்டு இறந்தார். அதன் பின்னர் 17 மாதங்கள் ஆகியும் அவரது மனைவி சபுரா அம்மாளுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

இது குறித்து சபுரா அம்மாள் கூறுகையில், நாட்டிற்காக பாடுபட்ட எனது கணவரின் தியாகத்தை நினைத்து பார்த்து கூட எனக்கு உதவி தொகையை வழங்க முன்வராத அதிகாரிகளை கண்டு வேதனைப்படுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இவருக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் உரிய முறையில் தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
SOURCE : INNERAM>COM
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது