அதிரை உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளின் ஜாலங்கள்!


கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூராட்சியினை திமுக கைப்பற்றியது. அப்பொழுது தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை கவரும் பல்வேறு வாக்குறுதிகள் அரசியல் கட்சிகள் சார்பில் அள்ளி விடப்பட்டன. மக்களும் அதனை நம்பி ஓட்டு போட்டனர். இப்பொழுது அடுத்த உள்ளாட்சி தேர்தலும் நெருங்கி வந்துவிட்டது ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என கேட்டால் பதில்(?)

திமுக தரப்பில் நாங்கள் எதிர்கட்சியாக இருப்பதால் ஆளும் கட்சி நிதி தர மறுக்கிறது என கூறுகின்றனர். அப்போ இந்த முறையும் அதிமுகவே பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளதே என குறுக்கிடும் போது பதில் சொல்லாமல் பின்வாங்குகின்றனர்.

ஆளும் கட்சிகாரர்களிடம் இதுபற்றி கேட்டால் நாங்கள் வெற்றிப்பெறாத ஊருக்கு எப்படி அதிக நிதி பெற்றுத்தர முடிவும் என கூலாக கூறுகின்றனர். உட்கட்சி பூசலால் பாதாள சாக்கடை திட்டமும் பாதாளத்திற்குள் போய்விட்டது. 

இதுபோல் கடந்த தேர்தல்களில் அரசியல் கட்சிகள் அதிரை மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளும் அதன் நிலைகளையும் அடுத்து வரக்கூடிய பதிவுகளில் விரிவாக பார்க்கலாம். 
Share:

1 comment:

 1. பேசாமல், எந்த கட்சியாக இருந்தாலும் மாநிலத்தை ஆளும் கட்சி தான் எல்லாப்பகுதிகளிலும் (மாநாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்ச்சி, ஒன்றியம் என‌) ஆட்சி, அதிகார பொறுப்பில் இருக்க வேண்டும் என ஒரு புதிய சட்டத்தை போட்டு நிதி ஆதாரங்களை நிரம்பப்பெற்று மாநில மக்களுக்கு பரவலாக எவ்வித ஓரவஞ்சனையின்றி சேவை செய்து தொலைத்து விடலாம்.

  காரணம், நாட்டில் மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளுவதில்லை, மாநிலத்தில் ஆளும் கட்சியைச்சார்ந்தவர் நம் தொகுதி எம்பி, எம்.எல்.ஏ, சேர்மனாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் பெருசா எதுவும் செய்து முடித்துவிடுவதும் இல்லை.

  இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் முரண், முட்டுக்கட்டை, ஒத்துழையாமை என்று இருந்து வருவதால் தான் அழகாய் காலை, இரவு என இருவேளை எங்களூர் கடல்கரையோரம் கூச்சிக்கு,ச்சிக்கு,ச்சிக்கு என்று கரும்புகை கக்கி ஓடிக்கொண்டிருந்த கம்பன் இன்று எங்கோ ஒளிந்து ஒளிந்து ஆரவாரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

  வார்டு மெம்பர் என சொல்லிக்கொள்கிறார்கள், நமக்கு நன்கு தெரிந்தவராக, நண்பராக, சில வேளை சொந்தக்காரராக கூட இருக்கிறார். ஆனால் பொதுப்பணிகளில் அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை அவர்களின் சொந்த தொழிலிலும் கூட என்பது தான் நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது.

  என்ன தான் வெளிநாடுகளில் தகதக வெளிச்சத்தில், கமகம மணத்துடன் நாம் வாழ்ந்து வந்தாலும் நம்மூர் இரவு நேர தெருக்கடலை வண்டியின் குத்து விளக்கு வெளிச்சமும், கடைத்தெரு மீன் மார்க்கெட்டின் வாசமும் எமக்கு என்றும் பரவசம் தந்து நாள் தோறும் உள்ளத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் என்பதை உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நன்குணர்ந்து ஊருக்கு ஏதேனும் நல்லது செய்து வந்தால் நலமே. அதற்கு உங்களுக்கு சிலவேளை மக்கள் மன்றத்தில் எவ்வித பாராட்டு பத்திரமும் கிடைக்காமல் விடுபட்டு போய் இருக்கலாம். ஆனால் படைத்த அல்லாஹ்வின் பாராட்டு பத்திரம் பத்திரமாய் நிச்சயம் கிடைக்கவே செய்யும்.

  இது யாருக்கும் அறிவுரையல்ல; பிறந்த மண் பற்றி அரபு பாலைவன‌ மண்ணிலிருந்து ஓர் ஆதங்கம்.

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது