மாற்றம் காணும் பிலால் நகர்! அதிரை இளைஞர்களின் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!


ஏரிப்புறகரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். இவர்கள் பெரும்பாலும் தின கூலி வேலையினை நம்பியே வாழ்க்கையினை நகர்த்திவருகின்றனர். இது ஒருபுறமிருக்க இந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் பெரும்பான்மை வீடுகளில் கழிவறை வசதியில்லை. இதனால் பெண்கள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர். 

இந்நிலையில் அரசின் மானியத்தில் வீடுகள் தோறும் கழிவறை கட்டிகொடுக்கும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் அதிரை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து 128 வீடுகளுக்கு கழிவறை கட்டிகொடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களுக்குமுன் இறங்கினர்.

இதில் முதல் கட்டமாக சமூக ஆர்வலர்கள் சிலரிடம் வசூல் செய்த பணத்தை கொண்டு தலா 18,000 ரூபாய் மதிப்பில் தரம்வாய்ந்த 6 கழிவறைகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிலால்நகர் டெவலப்மெண்ட் புரோகிராமின் ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் முகம்மது தம்பி அவர்கள் கூறுகையில் "முழுமையாக கழிவறை கட்டிய பின்னரே அரசின் மானியம் ரூ. 12000 பயனர்களுக்கு கிடைக்கும் நிலையுள்ளது. ஏற்கனவே வறுமையில் உள்ள மக்கள் தங்கள் கை பணத்தை போட்டு கழிவறை கட்டுவது என்பது சாத்தியப்படுவதாக தெரியவில்லை. அதனால் இளைஞர்கள் நாங்கள் ஒன்றினைந்து வறுமையிலிருக்கும் மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் சிலரிடம் நிதி வசூல் செய்து முதல் கட்டமாக 6 கழிவறைகளை தரமுடன் கட்டி கொடுத்துள்ளோம். மேலும் மீதமுள்ளவர்களுக்கு கழிவறை கட்டி கொடுக்க எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது." என்றார்.

பிலால்நகர் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடும் இவர்களை போன்ற இளைஞர்களின் முயற்சிக்கு நம்மால் இயன்ற பங்கினை செய்வோம் சமூகத்தை முன்னெடுப்போம்.

மேலும் விபரங்களுக்கு முகம்மது தம்பி அவர்களை 9677741737 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக்கொள்ளவும்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது