அதிரையில் விடிவுக்கு வந்தது போஸ்ட் ஆபிஸ் தெரு சாக்கடை பிரச்சினை !!


அதிராம்பட்டினம் 11 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சிலமாதங்களாக சாலையில் கழிவுநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனால் வணக்க ஸ்தலங்களுக்கு செல்லுபவர்கள், பாதசாரிகள்,வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர் .

இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி நிராவகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி  நிர்வாகம் தொடர் மெத்தனப்போக்கை கையாண்டு வந்துள்ளது.

இந்நிலையில் அதிரை இஸ்லாமிக் வெல்பர் அசோஷியேஷன் சார்பில் கடந்த 26.07.2016 அன்று பேரூராட்சி மன்றம் எதிரே சாக்கடை ஊற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தது இதனை தொடர்ந்து காவல்துறையினர் சார்பில் இரண்டுநாட்கள் அவகாசம் கோரப்பட்டது .

இதன்காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், போராட்டம் நடைபெறும் 28 ஆம் தேதி அன்று இருதரப்பாருக்கும் இடையே காவல்நிலையத்தில்  பேச்சு வாரத்தை நடைபெற உள்ளது என காவல்துறையின் மூலம் ஒருநாள் முன்னதாக AIWA அமைப்பினருக்கு சம்மன் அனுப்பியது. 

அதில் சேர்மன் அஸ்லம் , EO முனியசாமி , வார்டு கவுன்சிலர் அன்சர்கான், குலோப்ஜான் அன்சாரி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் இந்த அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என அதில் குறிப்பிட்டு இருந்தது. 

அதன்படி AIWA அமைப்பினர் தேதி குறிப்பிடப்பட்ட அன்று காலை  11 மணிக்கெல்லாம் காவல் நிலையத்தில் காத்திருந்தனர், .ஆனால் குறிப்பிட்டபடி அங்கு யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை . 

இதனை தொடர்ந்து அவ்வமைப்பினரை சமாதனம் செய்த காவல் அதிகாரிகளின் அவர்களின் வேண்டுகோளின் படி மேலும் சிலநாட்கள் பொறுமை காத்தனர் . இருப்பினும் அதிகாரிகள் மட்டத்தில் AIWA அமைப்பினர் கொடைச்சல் கொடுத்தே வந்துள்ளனர். 

இந்நிலையில் AIWA அமைப்பின் பொருளாளரை  தொடர்புகொண்ட EO முனியசாமி இன்னும் 5 நாட்கள் பொறுத்துக்கொள்ளும்படியும் .இதற்கான ஆணையை விரைவில் பெற்றுவிடுவோம் என்ற உறுதி மொழியை கொடுத்துள்ளார். இருப்பினும் எழுத்து மூலமாக எழுதி தாருங்கள் என கேட்டதற்கு நான் தற்பொழுது ஊரில் இல்லை என்றும் என்னை நம்புங்கள் என உறுதி பட கூறியதை அடுத்து அந்த அமைப்பினர் பொறுமையாக காத்திருந்தனர்.

அதன்படி அப்பகுதியில் கால்வாய் காட்டும் பணிக்காக இன்று மாலை கருங்கல்,மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வந்திறங்கியுள்ளது 

.இதுகுறித்து EO  முனியசாமியை தொலைபேசி வாயிலாக  தொடர்புகொண்ட AIWA அமைப்பினர் தொடர்பு கொண்டு பழைய போஸ்ட்டாபீஸ் சாலையில்   வந்திறங்கியுள்ள மணல் ஜல்லி போன்றவைகள் எதற்க்கானது என்ற கேள்வியை கேட்டுள்ளனர் . அதற்க்கு பதிலளித்த EO நீங்கள் கோரிக்கை விடுத்த கால்வாய் கட்டுமான பணிக்கானது என்றும் உங்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாகவே AD அலுவலகத்தில்  ஆணையை வாங்கி வந்ததாக EO கூறினார் . எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே . Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது