களவு போனதில் அதிரை காவல்துறை மீட்டது எவ்வளவு தெரியுமா? அப்போ இதை படிங்க!அதிரையில் சமிப காலமாக பல்வேறு தருணங்களில் திருட்டு முயற்சிகள் நடைபெற்றது இருப்பினும் அதன்பிறகு காவல்துறையின் அலட்சிய போக்கினால் காவல் நிலையம் அருகிலேயே திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். இது அதிரை காவல்துறையினருக்கு மாவட்ட அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வாக கருதப்பட்டு வந்த நிலையில் சுமார் 30சதுர கி.மீ காவல் எல்லை பரப்பளவு கொண்ட அதிரை காவல்நிலையத்தில் போதுமான காவலர்கள் பணியில் இல்லை என குமுறுகின்றனர் சில காக்கிகள். 

அதுமட்டுமல்லாமல் கடந்த 2012முதல் 2014வரையில் களவு போனவை மற்றும் அதில் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்த விபரங்கள் தற்பொழுது தெரியவந்துள்ளன. அதன்படி 2012ஆம் ஆண்டு ரூ. 5,29,100 களவு போனதில் ரூ. 1,49,100, 2013ஆம் ஆண்டு ரூ. 5,27,000 களவு போனதில் ரூ. 3,42,000, 2014ஆம் ஆண்டு ரூ. 5,05,500 களவு போனதில் ரூ. 3,03,000 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. 
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது