மதுக்கூர் மமக போராட்டம் கேன்சல்.

மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுக்கடையை அகற்ற
கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று மாலை 5 மணி
அளவில் மதுக்கடை முற்றுகை இடபோவதாக அறிவித்து இருந்தனர்.
அதற்கான ஏற்பாடுகளை மமகவினர் பரபரப்பாக
செய்து வந்தனர்.. போராட்டத்திற்கு பல தரப்பு மக்களும்
ஆதரவு தெரிவித்தனர்..போராட்டத்தில் சுமார் 400க்கும்
மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் மமகவினர்
தெரிவித்தனர்..
மதியம் 12 மணி அளவில் அரசு அதிகாரிகள் அமைதி பேச்சு
வார்த்தைக்கு மமகவினரை அழைப்பு விடுத்தனர்..அதனை ஏற்று
மமகவினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சுவார்த்தை
மதுக்கூர் யூனியன் ஆபிஸில் நடந்தது.இந்த சந்திப்பில் மமக
மாவட்ட செயலாளர் கபார் தலைமையில், மமக நகர
செயலாளர் ராசிக் அகமது, தமுமுக மாவட்ட துணை
செயலாளர் ஜபருல்லா, நகர பொருளாளர்
Er.இலியாஸ், மமக நகர துணை செயலாளர்கள்
அப்பாஸ்,சர்புதீன் மற்றும் மூத்த நிர்வாகிகள் முஜிபுர்
ரஹ்மான், ஹாஜா மைதீன், நிசார் அகமது, சிராஜ்,
தான், அல்லைன் முஜிபுர் ரஹ்மான் முன்னிலையில் மற்றும்
உறுப்பினர்கள் ஆகியோரும் பட்டுக்கோட்டை தாசில்தார் ,கலால்
துறை அதிகாரிகள், மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர்
முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
இதில் மமகவினர் தங்களின் நியாமான கோரிக்கைகளை,
அப்பகுதியில் மதுக்கடையால் ஏற்படும் விளைவுகளை
தெளிவாக எடுத்து உரைத்தனர்.. மேலும் கடந்த
காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் பதிவு
செய்தனர். ஏற்கனவே அரசு அதிகாரிகளால் எழுதி
கொடுக்கப்பட்ட வாக்குறுதி லட்டர்களும்
கொடுக்கப்பட்டு, எவ்வித நடவடிக்கைகள் எடுக்கவில்லை
என்பதை ஆதங்கத்தோடு மமகவினர் பதிவு செய்தனர்.
பின்னர் அரசு அதிகாரிகள் பேசுகையில்: கடையை அப்புறப்படுத்த
அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்கிறோம்,
நடவடிக்கைகள் மேலிடத்திற்கு செய்திகளை கொண்டு
சென்று, கடையினை அப்புறப்படுத்த சுமார் 3 மாத காலம்
அவகாசம் கேட்டனர்.
பின்னர் மமகவினர் ஆலோசித்து கடையினை எவ்வளவு விரைவாக
அப்புறப்படுத்த முடியுமோ அப்புறப்படுத்த வேண்டும் இல்லையேனில்
மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் அரசு
அதிகாரிகள் இடத்தில் தெரிவித்தனர்.
காவல்துறை ஆய்வாளர் பேசுகையில்: மமகவினர் கோரிக்கை
சம்பந்தமாக மேல் இடத்திற்கு தகவல்
கொடுத்துவிட்டோம் விரைவில் அக் கடை அகற்றப்படும் என
தெரிவித்தார்..
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டதால் கடை
அப்புறப்படுத்துவதாக அரசு அதிகாரிகள் எழுத்து வடிவில்
எழுதி கொடுத்ததால் இன்று மாலை நடைபெற
இருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது எனவும் மமகவினர்
தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் , கல்லூரி மாணவ மாணவிகளுக்கு
பெரும் இடையூறாக இருக்கும் அக் கடை அகற்ற சிறப்பான
முயற்சி மேற்கொண்டு 

தகவல். madukkurexpress

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது